பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி அருகே ஒற்றை யானை முகாம்: வனத்துறையினர் தேடுதல் வேட்டை

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி ஏரி அருகே, நேற்று மாலை ஒற்றை யானை முகாமிட்டுள்ளதாக வனத்துறைக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதற்குள் அப்பகுதி மக்கள், பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதாகவும், குண்டுகுறுக்கி வழியாக, எலசேப்பள்ளி வனப்பகுதிக்கு யானை சென்றதாகவும் தகவல் வெளியானது. மேலும், மருதாண்டப்பள்ளியை சுற்றியுள்ள

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி ஏரி அருகே, நேற்று மாலை ஒற்றை யானை முகாமிட்டுள்ளதாக வனத்துறைக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதற்குள் அப்பகுதி மக்கள், பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதாகவும், குண்டுகுறுக்கி வழியாக, எலசேப்பள்ளி வனப்பகுதிக்கு யானை சென்றதாகவும் தகவல் வெளியானது. மேலும், மருதாண்டப்பள்ளியை சுற்றியுள்ள விவசாயிகள், இரவு நேரத்தில் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டாம் என்றும், ஆடு, மாடு மேய்க்க வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும், அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர், நேற்றிரவு யானை வந்து சென்றதற்கான தடயங்கள் உள்ளதா என, மருதாண்டப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் தேடினர். இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, 'ஓசூர் வனச்சரக பகுதியில் யானைகள் ஏதும் இல்லை. அப்படி மருதாண்டப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் இருந்திருந்தால், கர்நாடகா மாநில வனப்பகுதி அல்லது வேப்பனஹள்ளி காப்புக்காட்டில் இருந்து வந்திருக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X