பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்த மக்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நேற்று, 640 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், சூளகிரி, கூலியம் அடுத்த பண்டப்பள்ளியில், ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து, ஆற்றங்கரையோர மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கையோ, தடுப்?போ அமைக்கவில்லை.

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நேற்று, 640 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், சூளகிரி, கூலியம் அடுத்த பண்டப்பள்ளியில், ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து, ஆற்றங்கரையோர மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கையோ, தடுப்?போ அமைக்கவில்லை. இந்நிலையில், ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல வேண்டிய மக்கள், ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை நடந்து கடந்து சென்றனர். நேற்று மாலை மிகவும் தாமதமாக, சூளகிரி தாசில்தார் நீலமேகன் உத்தரவின்படி, ஆற்றில் மக்கள் இறங்கக்கூடாது என, ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள், ஆற்றை கடந்து, ஆற்றங்கரையோரம் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டனர். அதிகாரிகள் அவர்களை, மீண்டும் திரும்பி வர அனுமதிக்காததால், மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X