பொது செய்தி

தமிழ்நாடு

தம்பதிக்கு முதியோர் உதவித்தொகை

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரியை சேர்ந்தவர்கள், 100 வயதை கடந்த பெரியண்ணன் - வெங்கடம்மா தம்பதி. இவர்களை, குடும்பத்தினர் கைவிட்ட நிலையில், அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள ஓட்டு வீட்டில் தனியாக ஆதரவின்றி வசிக்கின்றனர். போதிய வருமானமின்றி, சுண்ணாம்பு விற்பனை செய்து பிழைப்பு நடத்துகின்றனர். வெங்கடம்மாவிற்கு மட்டும், முதியோர் உதவித்தொகை கிடைத்து வந்தது. இது தொடர்பாக, நமது நாளிதழில்

ஓசூர்: சூளகிரியை சேர்ந்தவர்கள், 100 வயதை கடந்த பெரியண்ணன் - வெங்கடம்மா தம்பதி. இவர்களை, குடும்பத்தினர் கைவிட்ட நிலையில், அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள ஓட்டு வீட்டில் தனியாக ஆதரவின்றி வசிக்கின்றனர். போதிய வருமானமின்றி, சுண்ணாம்பு விற்பனை செய்து பிழைப்பு நடத்துகின்றனர். வெங்கடம்மாவிற்கு மட்டும், முதியோர் உதவித்தொகை கிடைத்து வந்தது. இது தொடர்பாக, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அவர்களை கடந்த ஜூலை, 31ல், சப்கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும், குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கிய அவர், பெரியண்ணனுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இம்மாதத்தில் இருந்து பெரியண்ணனுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். முதல்மாத முதியோர் உதவித்தொகையை, சூளகிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மிருணாளினி, நேற்று நேரில் சென்று வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X