பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு கவுன்சிலர் மீது பஞ்., தலைவி புகார்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கோட்டப்பட்டி பஞ்., தலைவி கீதா நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: என் கணவர் கோவிந்தசாமி, 57, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புலியூர் ஜம்பு ஏரியில் மீன் குத்தகை எடுத்துள்ளார். இதற்காக ஊர்மக்களுக்கு பணம் கொடுக்க சிலர் வலியுறுத்துகின்றனர். இதற்கு என் கணவர் மறுப்பதால், அவரை

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கோட்டப்பட்டி பஞ்., தலைவி கீதா நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: என் கணவர் கோவிந்தசாமி, 57, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புலியூர் ஜம்பு ஏரியில் மீன் குத்தகை எடுத்துள்ளார். இதற்காக ஊர்மக்களுக்கு பணம் கொடுக்க சிலர் வலியுறுத்துகின்றனர். இதற்கு என் கணவர் மறுப்பதால், அவரை கோட்டப்பட்டி ஞானகுமார், 27, பஞ்., வார்டு கவுன்சிலர் சிவன், 40, மற்றும் சக்தி, 40, சாதிக்பாஷா, 37 ஆகியோர் மிரட்டி வருகின்றனர். டெண்டர் பணிகளை தங்களுக்கு ஒதுக்க என்னையும் மிரட்டுகின்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் என்னையும், கணவர் கோவிந்த சாமியையும் தாக்கினர். எங்கள் மீது பொய் புகார்களை கொடுத்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X