பொது செய்தி

தமிழ்நாடு

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருட்டு: வெளிச்சத்துக்கு வந்த போலி நகை விபரம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
தர்மபுரி: அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால், கோவிலில் போலி நகைகள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தர்மபுரி அன்னசாரகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது விநாயகர் சிவசுப்பிமணிய சுவாமி கோவில். அர்ச்சகர் தண்டபாணி, 60, நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து விட்டு வழக்கம் போல் கோவிலை பூட்டிச் சென்றார்.

தர்மபுரி: அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால், கோவிலில் போலி நகைகள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


தர்மபுரி அன்னசாரகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது விநாயகர் சிவசுப்பிமணிய சுவாமி கோவில். அர்ச்சகர் தண்டபாணி, 60, நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து விட்டு வழக்கம் போல் கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை, 6:30 மணிக்கு கோவிலை திறந்தபோது, அங்கிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அவரது தகவலின்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் விமலா, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தர்மபுரி டி.எஸ்.பி., அண்ணாதுரையும் விசாரித்தார். விசாரணையில், கோவிலில் இருந்து சிகப்பு கல் பதித்த, நான்கு வெள்ளிக்கிரீடம் உட்பட, 21.79 கிலோ வெள்ளி பொருட்கள், தங்கத்தாலி மூன்று திருடுபோனதாக கூறப்பட்டது. இந்நிலையில், கோவிலில், நான்கு கிரீடங்கள், மூன்று தங்கத்தாலி இருந்ததும், இதில், 2.5 கிலோ மதிப்பிலான கிரீடங்கள், தங்கத்தாலி போலியானது என்பதும் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.

அறநிலையத்துறை பதிவேட்டில் உள்ளதை விட, கோவிலில் கூடுதலாக வெள்ளி, தங்க பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு கணக்கு காட்ட முடியாமல், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் திணறியதால், நேற்று காலை, 6:30 மணிக்கு கோவில் கொள்ளை குறித்து தகவலறிந்த அதிகாரிகள் மாலை, 5:30 மணி வரை போலீசாரிடம் முறையாக புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷை மாலை, 5:35 மணிக்கு மொபைல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''கோவிலிலுள்ள நகைகள் குறித்து பதிவேட்டின் படி ஆய்வு செய்யப்பட்டது. அர்ச்சகர் அலங்காரத்துக்காக சில ஆபரணங்களை வாங்கி வைத்திருக்கலாம். கோவில் பதிவேட்டின்படி இருந்த நகைகள் போலி நகையாக இருக்காது. கோவில் செயல் அலுவலர் விமலா, ஆய்வாளர் சங்கர் மூலம் புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள், கோவில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்கை அகற்றி, அதை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X