பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் கொள்ளை நடந்தும் புகார் கொடுக்காத அதிகாரிகள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
தர்மபுரி: ''தர்மபுரி கோவிலில் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசில் புகார் அளிக்காத அதிகாரிகள் குறித்து, அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,'' என, திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.இதுகுறித்து அவர், தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி, அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு

தர்மபுரி: ''தர்மபுரி கோவிலில் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசில் புகார் அளிக்காத அதிகாரிகள் குறித்து, அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,'' என, திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


இதுகுறித்து அவர், தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி, அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த, 2014ல், ஆர்.டி.ஓ., உள்ளிட வருவாய்த்துயை?னர், ஹிந்து சமய அறநிலையத் துறையினர், போலீசார், நில அளவை பிரிவு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு சொத்துக்கள் கையப்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று(நேற்று) அதிகாலையில், இக்கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. காலை, 6:30 மணிக்கு ஹிந்து சமய அறநிலையத்துறையினருக்கு தகவல் தெரிந்தும், பிற்பகல், 3:30 மணி வரை அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து, அதிகாரிகள் புகார் தெரிவிக்க காலதாமதம் செய்வது ஏன். இங்குள்ள நகைகளை உரிய முறையில் சோதனை செய்ய வேண்டும். இதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், தவறு செய்தவர்கள், அவர்களுக்கு துணை சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X