பொது செய்தி

தமிழ்நாடு

4,000 பொம்மைகள்; உள் விளையாட்டரங்கில் பிரமாண்ட கொலு

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: நவராத்திரி விழாவையொட்டி உள் விளையாட்டரங்கில், 4,000 பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.மஹாளய அமாவாசைக்கு பிறகு, அடுத்த ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மன் வழிபாடு, அடுத்து மஹாலட்சுமி வழிபாடு, இறுதியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு நடக்கும். வீடுகளில் கலசம் வைத்து, ஒன்பது படிகளில் கொலு வைத்து

ஈரோடு: நவராத்திரி விழாவையொட்டி உள் விளையாட்டரங்கில், 4,000 பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.


மஹாளய அமாவாசைக்கு பிறகு, அடுத்த ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மன் வழிபாடு, அடுத்து மஹாலட்சுமி வழிபாடு, இறுதியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு நடக்கும். வீடுகளில் கலசம் வைத்து, ஒன்பது படிகளில் கொலு வைத்து சிறப்பு பூஜை நடக்கும். இன்று நவராத்திரி விழா தொடங்குகிறது. ஈரோடு கே.என்.கே., சாலையில் ராம் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில், டேபிள் டென்னிஸ் உள் விளையாட்டரங்கில், 4,000 பொம்மைகள் கொலு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கைலாச பருவதம், சாந்தி துர்க்கை, முனிதேசிகர், அஷ்ட புஜ லட்சுமி நாராயணர், நவ நாட்சியார், சங்கீத மும்மூர்த்திகள், திருப்பதி கும்பாபிஷேகம், சுப்ரபாதம், கருடசேவை. சரஸ்வதி பூஜை, அபிமன்யு திருமணம், குறவன் குறத்தி, குண்டம் திருவிழா மற்றும் பல்வேறு நூற்றுக்கணக்கான செட் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கடந்த, ஒரு வாரமாக, வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், அனிதா உள்ளிட்டோர் இந்த கொலுவை அமைத்துள்ளனர். கொரோனாவால் போட்டி நடத்த இயலாத காரணத்தால் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X