சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெருந்துறையில் ரூ.1.38 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: பெருந்துறையில், பொதுமக்களிடம் இருந்து, 1.38 கோடி ரூபாய் ஏமாற்றி மோசடி செய்தவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளையை சேர்ந்தவர் பாஸ்கரன். கம்புளியம்பட்டியை சேர்ந்தவர் சேகர், 44. இருவரும் இணைந்து, சரளையில் பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனத்தை துவக்கினர். கம்புளியம்பட்டியை

ஈரோடு: பெருந்துறையில், பொதுமக்களிடம் இருந்து, 1.38 கோடி ரூபாய் ஏமாற்றி மோசடி செய்தவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளையை சேர்ந்தவர் பாஸ்கரன். கம்புளியம்பட்டியை சேர்ந்தவர் சேகர், 44. இருவரும் இணைந்து, சரளையில் பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனத்தை துவக்கினர். கம்புளியம்பட்டியை சேர்ந்த குமார், ஊழியராக பணியாற்றினார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், நாட்டு கோழி கொடுத்து பராமரிக்க மாதம், 8,000 ரூபாய், ஆண்டு முடிவில், 8,000 ரூபாய் கொடுக்கப்படும். வி.ஐ.பி. திட்டத்தில், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம், 9,000 ரூபாய், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகை, 9,000 ரூபாய் வழங்கப்படும். மூன்றாண்டு முடிவில், முதலீடு தொகை திருப்பி கொடுக்கப்படும் என, கவர்ச்சிகரமான விளம்பரம் கொடுத்தனர். இதை நம்பி, 98 முதலீட்டாளர்கள், ஒரு கோடியே, 38 லட்சத்து, 98 ஆயிரத்து, 500 ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் பராமரிப்பு, ஊக்கத்தொகை கொடுக்கவில்லை. முதலீட்டாளர்கள் இதுபற்றி கேட்டபோது, அலுவலகத்தை பூட்டி தலைமறைவாகினர். ஏமாற்றி மோசடி செய்தது தொடர்பாக, பொள்ளாச்சி ராஜ் நகரை சேர்ந்த பழனிசாமி, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில், 2012ல் புகாரளித்தார். போலீசார், மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். கோவையில் உள்ள, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. விசாரணைக்கு ஆஜராகாததால், பாஸ்கரன் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரவி வழக்கை விசாரித்து, சேகருக்கு, 10 ஆண்டு சிறை, 76 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஊழியர் குமார் விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X