பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம்: எம்.பி., ஜோதிமணி புறக்கணிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை எம்.பி.,ஜோதிமணி புறக்கணித்து இருப்பதாக, தி.மு.க.,வினர் அதிருப்தியில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட பஞ்., வார்டு எண் 8; க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 8 உள்பட, 10 இடங்களில் நடக்கிறது. தி.மு.க.,வில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க.,வில் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூர்: கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை எம்.பி.,ஜோதிமணி புறக்கணித்து இருப்பதாக, தி.மு.க.,வினர் அதிருப்தியில் உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட பஞ்., வார்டு எண் 8; க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 8 உள்பட, 10 இடங்களில் நடக்கிறது. தி.மு.க.,வில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க.,வில் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காங்., - எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., வேட்பாளருக்கு பிரசாரம் செய்யாமல் புறக்கணித்து வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2019ல் கரூர் லோக்சபா தொகுதி வெற்றி முதல், தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் எம்.பி., ஜோதிமணி பங்கேற்றார். கடந்த இரண்டு மாதத்துக்கு முன் என்ன நடந்தோ தெரியவில்லை; தி.மு.க., நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். கரூர், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட இரண்டு கவுன்சிலர்கள் தேர்தல் நடந்து வருகிறது. கூட்டணி கட்சி, தி.மு.க., அழைத்தும் கூட, ஜோதிமணி பிரசாரத்தை புறக்கணித்து வருகிறார். ஆனால், கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், 9வது வார்டு மாவட்ட பஞ்., கவுன்சிலர் தேர்லில் பிரசாரம் செய்துள்ளார். நேற்று கரூரில் இருந்த போதும், இங்கு பிரசாரத்துக்கு வராமல் ஜோதிமணி புறக்கணித்து இருப்பது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிரசாரத்தின் இறுதிநாள் என்பதால், அவர் வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X