பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்திறப்பு 1,000 கனஅடியாக குறைப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 12 ஆயிரத்து, 308 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 12 ஆயிரத்து, 118 கனஅடியாக சற்று குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து

மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 12 ஆயிரத்து, 308 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 12 ஆயிரத்து, 118 கனஅடியாக சற்று குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் வினாடிக்கு, 5,000 கனஅடியாக இருந்த மேட்டூர் டெல்டா நீர் திறப்பு, நேற்று மதியம், 12:00 மணி முதல், 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்மட்டம், 75.63 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X