தமிழ்நாடு

சேலம் பெரியார் பல்கலையில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தர் உள்பட 3 பேர் மீது அடுத்தடுத்து வழக்கு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: பெரியார் பல்கலையில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் துணைவேந்தர் உள்பட, 3 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அடுத்தடுத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.சேலம், கருப்பூர், பெரியார் பல்கலை துணைவேந்தராக சுவாமிநாதன், 2014 ஜூன், 16 முதல், 2017 ஜூன், 15 வரை, பதவி வகித்த காலத்தில் முறைகேடு நடந்தது குறித்து, அப்போதைய உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவாவுக்கு புகார் சென்றது.

சேலம்: பெரியார் பல்கலையில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் துணைவேந்தர் உள்பட, 3 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அடுத்தடுத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


சேலம், கருப்பூர், பெரியார் பல்கலை துணைவேந்தராக சுவாமிநாதன், 2014 ஜூன், 16 முதல், 2017 ஜூன், 15 வரை, பதவி வகித்த காலத்தில் முறைகேடு நடந்தது குறித்து, அப்போதைய உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவாவுக்கு புகார் சென்றது. அதில், பேராசிரியர் நியமனத்தில் நடந்த மோசடியில் ஆவணங்கள் மாயமானது குறித்து, பதிவாளர் மணிவண்ணன், சேலம் மாநகரின், அப்போதைய போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் அளித்தார். மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஓய்வு பெற்ற பதிவாளர் அங்கமுத்து மீது வழக்குப்பதிந்தனர். இதை அறிந்த அங்கமுத்து, 2018 பிப்., 19ல், தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், 10 பக்க கடிதம் எழுதினார். அதை, அப்போதைய லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு அனுப்பியிருந்தார். பின், கடிதம் குறித்து, அப்போதைய சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரித்தார். அதில் முறைகேடாக பேராசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆவணங்கள் மாயமானதன் பின்னணி, மாணவர்களுக்கு தேர்வு பேப்பர் வாங்கியதில் முறைகேடு, விதிக்கு முரணாக பல்கலை தேர்வு முடிவை வெளியிடும் உரிமையை தனியாருக்கு வழங்கியதில் ஊழல், கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது, கல்லூரிகளில் உயர் படிப்பு தொடங்க வழங்கப்பட்ட அனுமதியில் முறைகேடு, ஊழியர் நியமனத்தில் முறைகேடு குறித்த அறிக்கையை, அரசு, லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு அனுப்பினார். அதன் மீது நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவிட்டார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதியாமல் தாமதம் செய்தனர். கடந்த ஜூலை, அங்கமுத்துவின் மனைவியான, அரசு பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, தற்போதைய லஞ்ச ஒழிப்பு இயக்குனர் கந்தசாமியிடம், 'பெரியார் பல்கலை முறைகேடு, கணவர் தற்கொலை பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்' என, புகார் அளித்தார். இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் விசாரித்து, கடந்த ஆக., 13ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: தேர்வு முடிவு வெளியிட தேவையான அனைத்து வசதிகளும் பல்கலையில் உள்ளன. அத்துடன், அது ரகசியம் காக்க வேண்டியது. ஆனால், அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன், பதிவாளர் அங்கமுத்து, தேர்வு கட்டுப்பாடு அலுவலர் லீலா ஆகியோர், தேர்வு முடிவு வெளியிடும் உரிமையை, சென்னையை சேர்ந்த, 'கே.லேப்ஸ்' உரிமையாளர் அரவிந்தனுக்கு கொடுத்தனர். துணைவேந்தர் அதிகாரத்துக்கு உட்பட்டு, 10 லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியும். ஆனால், 3.26 கோடி ரூபாய் செலவு செய்து மோசடி நடந்துள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில், வையப்பமலை, நல்லூர்; சேலம் மாவட்டத்தில் தலைவாசல், காகாபாளையம்; தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு, உரிய அடிப்படை வசதி இல்லாத நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சேலம், மாமாங்கம்; தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள கல்லூரிகளில் உயர் படிப்பு வழங்கியதில் விதிமீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக, ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுவாமிநாதன், மறைந்த பதிவாளர் அங்கமுத்து, தேர்வு கட்டுப்பாடு முன்னாள் அலுவலர் லீலா மீது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊழியர் நியமனத்திலும் வழக்கு: பெரியார் பல்கலையில், 154 பேர் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதில், 2014 முதல், 2017 வரை, முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்ட தேர்வு கட்டுப்பாடு அலுவலர் லீலா, பேராசிரியர்கள் லட்சுமி மனோகரி, புவனலதா, ரமேஷ்குமார், முருகேசன், வெங்கடாஜலம் ஜோனாடுல்லா, வெங்கடேஸ்வரன், செல்வ விநாயகம், வெங்கடேசன், கார்த்திகேயன் ஆகியோரை, அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன் நியமித்தார். இதில், முறைகேடு நடந்துள்ளது. அதேபோல், 154 பேர் நியமனத்திலும், அலுவலக ஊழியர் உள்பட பிற பணியாளர், 47 பேர் நியமனத்திலும் முறைகேடு நடந்ததாக, பல்கலை தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கை, விசாரணை அடிப்படையில், சுவாமிநாதன், மறைந்த பதிவாளர் அங்கமுத்து மீது, 5 பிரிவில் வழக்குப்பதியப்பட்டது. மேலும், பல்கலையில், 2014 முதல், 2017 வரை நடந்த மோசடி தொடர்பாக, இரு வழக்குகள், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பல்கலைக்கு பேப்பர் வினியோகித்த, மதுரையை சேர்ந்த நிறுவனம் மீது வழக்குப்பதிய, விசாரணை நடக்கிறது. அடுத்தடுத்து வழக்குகளால், தற்போது பணியில் உள்ளவர்களை, போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளதால், அவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X