தமிழ்நாடு

சேலம் சாய கழிவு நீரால் நிலத்தடி நீருக்கு ஆபத்து: சுத்தகரிப்பு நிலையத்துக்காக ரூ.150 கோடியில் திட்ட மதிப்பீடு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம் மாவட்டத்தில் நிலவும் சாயக்கழிவு நீர் பிரச்சனையால், நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், திருப்பூரில் உள்ளது போல் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.சேலம் மாவட்டத்தில் சாயக்கழிவு நீர் தீராத பிரச்னைகளில் ஒன்று. அனுமதி பெற்ற, 77 சாய

சேலம் மாவட்டத்தில் நிலவும் சாயக்கழிவு நீர் பிரச்சனையால், நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், திருப்பூரில் உள்ளது போல் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.


சேலம் மாவட்டத்தில் சாயக்கழிவு நீர் தீராத பிரச்னைகளில் ஒன்று. அனுமதி பெற்ற, 77 சாய தொழிற்சாலை, 13 சலவை தொழிற்சாலை, பூஜ்ய நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர இயக்காமல் கழிவுநீரை அப்படியே வெளியேற்றும் அவலநிலை உள்ளது. தவிர, திடீர் சாய ஆலைகள் அடிக்கடி முளைத்து சுற்றுச்சூழலுக்கும் நீலத்தடி நீருக்கும் வேட்டு வைப்பதால் பிரச்னை நீள்கிறது. அதனால், வாரிய இசைவாணை பெற்ற, 90 சாய, சலவை தொழிற்சாலைகளில், 39 சாய, சலவை ஆலைகள் மூடப்பட்டு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கிய, 17 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இருந்தும், அப்பிரச்னை நீடிப்பதால் மாவட்ட நிர்வாகத்துக்கு தலைவலியாக உள்ளது. சாய தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, பொது சுத்திகரிப்பு நிலையம் நிறுவ, அரசிடம் முறையிட்டனர். கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி முழுவீச்சில் நடக்கிறது. அதேநேரம், வாழப்பாடி அருகே, 110 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட சாயப்பட்டறை உரிமையாளர் சங்க இணை செயலர் சீனிவாசன் கூறியதாவது: சேலம் மாவட்டம், மாமாங்கத்தில் தனியார் மருத்துவமனை எதிரே, 110 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய, சேலம் வந்த முதல்வரிடம் முறையிட்டோம். 90 சதவீத சாய நீரை, மறுசுழற்சி மூலம், மீண்டும் பயன்படுத்தப்படும். மீதி, 10 சதவீத நீரை ஆவியாக்கி, தேங்கும் உப்பு படிமானத்தையும் அகற்ற, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, பொது சுத்திகரிப்பு நிலையம், திருப்பூரில் இருப்பது போன்று நிறுவ,150 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாராகிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், சாய கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, அறிவித்துள்ளதால், மாவட்ட நிர்வாகமும் இடம் தேர்வு செய்ய முனைப்பு காட்டுகிறது. அதனால், ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை இருக்கும். அதன்மூலம், 10 ஆயிரம் சாய உரிமையாளர்கள் பயன்பெறுவதோடு, நேரடி, மறைமுகமாக, 10 ஆயிரம் தொழிலாளர் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: மாவட்டத்தில் சாய, சலவை தொழிற்சாலைகள் இணைந்த, பொது சுத்திகரிப்பு நிலையம் நிறுவ, இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மானிய கோரிக்கையில் அறிவித்தபடி, முக்கிய தொழில் பகுதியான மேட்டூரில், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் நிறுவப்படுகிறது. நீர்நிலைகளை காக்க சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் சேலத்தில் பறக்கும்படை அலுவலகம் ஏற்படுத்த மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ''இடம் தேர்வு செய்யும் பணி முழுவீச்சில் நடப்பதால், விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X