பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை அருகே பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, பல்லவர் கால அய்யனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.திருவண்ணாமலை, மரபுசார் அமைப்பை சேர்ந்த வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் ராஜ்பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், தெள்ளார் பகுதியில் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது நல்லூரில், பெரியகுப்பம் செல்லும் சாலையில் ஒரு விவசாய நிலத்தில், பல்லவர் கால அய்யனார் சிலையை கண்டெடுத்தனர். இது குறித்து,

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, பல்லவர் கால அய்யனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.


திருவண்ணாமலை, மரபுசார் அமைப்பை சேர்ந்த வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் ராஜ்பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், தெள்ளார் பகுதியில் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது நல்லூரில், பெரியகுப்பம் செல்லும் சாலையில் ஒரு விவசாய நிலத்தில், பல்லவர் கால அய்யனார் சிலையை கண்டெடுத்தனர். இது குறித்து, ராஜ்பன்னீர்செல்வம் கூறியதாவது: நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால அய்யனார் சிலை, மூன்றரை அடி அகலம், நான்கு அடி உயரம் கொண்ட, பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஜடாபாரம் தலையை அலங்கரித்தவாறும், வட்டமான முகம், தடித்த உதடு, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணியப்பட்டுள்ளது. கழுத்தில் உருண்டையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பளி மாலை, இரு கைகளில் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து உத்குதிகாசன கோலத்தில், வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்துள்ளவாறு உள்ளது. இடையில் உதிரபந்தம், இடை ஆடையில் உறையுடன் கூடிய குறுவாள் உள்ளது. வலது கையை, வலது காலின் முட்டி மீது வைத்து, கையை தொங்கவிட்டு தனது ஆயுதமான செண்டை பற்றிக் கொண்டும், இடது கை தொடை மீது வைக்கப்பட்டுள்ளது. இடது காலின் அருகே அய்யனாரின் வாகனமான குதிரை, இடது பக்கம் குத்துவிளக்கு ஒன்று உள்ளது. தலைப்பகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது. இவை, 9ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தை சேர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X