தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு தேசிய பா.ஜ.,வில் புதிய பொறுப்பு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.க., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பா.ஜ.,வின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி,
தமிழகம், 3 பேர், தேசிய பாஜ, புதிய பொறுப்பு, வழங்கல்

புதுடில்லி: பா.ஜ.க., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், இக்குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.


latest tamil news



இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன்னை சிறப்பு அழைப்பாளராக நியமித்துள்ளதற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு குஷ்பு, ஹெச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, குஷ்பு இன்று (அக். 07) தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்," என பதிவிட்டுள்ளார்.


மேனகா, வருண் பதவியில் இருந்து நீக்கம்



latest tamil news



இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய பொதுச் செயலாளராக இருந்த மேனகா, அவரது வருண் இருவரும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-202109:30:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு வோட்டு புகழ் வைத்யநாதனுக்கு தமிழ்நாட்டில் பாஜாக்கா சிறப்பு மேற்பார்வையாளர் பதவி வழங்கி கவுரவிக்க வேண்டும்..
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-அக்-202100:21:49 IST Report Abuse
Vena Suna ராதாகிருஷ்ணன் அடுத்த வருடம் ஆளுநர்.எச்ராஜா இன்னும் இரண்டு வருடங்களில். குஷ்பு பாத்து வருடங்களில் ஆளுநர்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
07-அக்-202123:51:03 IST Report Abuse
John Miller இந்த பதவியை கேட்டு இரண்டு நாட்களுக்கு முன் ராதாரவி அவர்கள் கதறினார். இப்போது கிடைக்காததால் விரைவில் திமுக திரும்புவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X