கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 07, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும்,'' என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி
ChennaiHC, Statue, HighCourt, சென்னை,உயர்நீதிமன்றம், சிலைகள், அகற்ற உத்தரவு

சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும்,'' என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (அக். 07) விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை என, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். இது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


மேலும், தமிழகத்தில் தலைவர் பூங்கா உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளைப் பூங்காவில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளைச் சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும். சிலைகள் பராமரிப்புத் தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து, அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைக்கின்றனர். தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அதேசமயம் பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது. சமுதாயத்துக்காகத் தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது.

ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கட்சி, தங்கள் தலைவர்களின் சிலைகளை வைக்கின்றனர். பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தைப் போக்க முடியாது என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN R - bangalore,இந்தியா
08-அக்-202120:52:02 IST Report Abuse
NATARAJAN R எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மாதம் கழித்து இவர்கள் ஒரு சிலையை கூட அகற்ற மாட்டார்கள். நீதிமன்றமும் அதைப் பற்றி கவலைப்படாது . தீர்ப்பு மட்டும் வீராவேசமாக இருக்கும். .இப்படித்தான் மூன்று மாதங்களுக்கு முன் இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். மூன்று மாதம் ஆகிவிட்டது நீதிமன்றம் சொன்னது எதையும் அரசுசெய்யவில்லை. நீதிமன்றம் கேட்டுக் கொள்ளவில்லை. அதையும் மீறி விசாரணைக்கு வந்தால் அரசு தரப்பில் ஒரு வருட அவகாசம் கேட்பார்கள். நீதிமன்றம் இரண்டு வருடம் கொடுப்பார்கள். அதோடு சரி. தனிநபர் என்றால் நீதிமன்ற அவமதிப்பு, கைது ,சிறை எல்லா தண்டனையும் உண்டு. அரசைப் பொருத்தவரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் அவ்வளவுதான். அரசு அலட்சியமாக இருக்கும்.இதுதான் இப்பொழுது நடக்கிறது.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
08-அக்-202100:27:45 IST Report Abuse
Aarkay இது நீதிமன்றம் கண்காணித்து, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என follow up செய்வது அவசியம். இல்லையென்றால், ஒரு பிரயோஜனமும் இல்லை.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
07-அக்-202122:37:29 IST Report Abuse
SUBBU அப்படியே மெரினாவில் உள்ள நான்கு சமாதிகளையும் வேறு இடத்துக்கோ அல்லது "அறிஞரையும்,கலைஞரையும்" அண்ணா அறிவாலயத்துக்கும், "புரட்சி தலைவரையும்,புரட்சி தலைவியையும்" ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்திலோ அல்லது போயஸ் கார்டனிலோ மாற்றி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டால் நீண்ட கடற்கரையை கொண்ட மெரினா சுத்தமாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X