லக்கிம்பூர் வன்முறை சம்பவம்; 2 பேர் கைது

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், உ.பி., அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுடைய ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜய் மிஸ்ரா மகனை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய்
Uttar Pradesh, Lakhimpur Kheri, Arrested, லக்கிம்பூர், வன்முறை சம்பவம், 2 பேர் கைது

லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், உ.பி., அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுடைய ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜய் மிஸ்ரா மகனை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என குரல்கள் எழுந்தன. இந்நிலையில் உ.பி.,யைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது.


latest tamil news


தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.,07) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உ.பி., அரசு இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும், கடுமையான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும் கடிதம் எழுதியிருந்த இரு வழக்கறிஞர்களும் குற்றம் சாட்டினர்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உ.பி., அரசு வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ‛வழக்கில் யார், யாரை கைது செய்துள்ளீர்கள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்? வழக்கு விசாரணை எந்த நிலைமையில் உள்ளது?' எனக் கேள்வி எழுப்பியதுடன் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


latest tamil news





2 பேர் கைது


இந்நிலையில், லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜய் மிஸ்ராவின் மகனை போலீஸ் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
07-அக்-202121:00:26 IST Report Abuse
mathimandhiri நம் ஊரில் ஜி.எஸ்.டி . ரோடு நீண்ட தூர வெளியூர் பயணங்களில் இரவில் குறிப்பிட்ட கார்களை நோட்டமிடும் பைக் கும்பல் ஒரு நெட்ஒர்க் வைத்திருக்கிறார்கள்//// பசையான கார்களை கட்டம் கட்டும் இந்த ஆட்கள் காரின் முன்பாகவோ ,அல்லது பின்புறமோ பைக்கில் தொடர்ந்து சென்று பாறாங்கல் அல்லது வேறு கூரான ஆயுதத்தால் அந்தக் காரை கண்ணாடி போன்ற இடத்தில் சேதப் படுத்தி ஓட்டுபவரின் பார்வையை கஷ்டமாக்குவார்கள்//// // ஓட்டுபவர் வண்டியை நிறுத்த வேண்டும் என்பதற்காக///// அப்படி நிறுத்தி விட்டால் அவ்வளவு தான் காரில் உள்ளவர்களின் நகை, பணம், மொபைல் எல்லாவற்றையும் பிடுங்கி கொள்வார்கள்////// இதை உணர்ந்தவர்கள்,, எனவே வண்டியை நிறுத்தாமல் படு வேகமாக ஓட்ட வேண்டிய நிர்பந்தம். அப்போது தான் அவர்களிடமிருந்து தப்ப முடியும்//////////////////////////////////சரி விஷயத்துக்கு வருவோம்.../////இதே போன்ற சூழ் நிலையில் தான் இந்த சம்பவத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உயிர் பயத்தில் வண்டியை ஒட்டியுள்ளார்கள்/////அப்படி இல்லை என்றால் அவர்களது உயிரை கலக காரர்கள் பறித்திருப்பார்கள்/////யார் என்பது தெரியாமலேயே போயிருக்கும்/////////கபட தாரிகளான காங்கிரசார் இதை மறைக்க கேவலமாக நடந்து கொள்கிறார்கள்///// அவர்கள் பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறார்கள்/////""விவசாயிகள்"" மற்றும் காலிஸ்தானிகளை பணத்தில் குளிப்பாட்டி நிலைமையை தத்தளிப்பாகவே தொடர வைக்கிறார்கள்///துரோகிகள்//////
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
07-அக்-202120:52:37 IST Report Abuse
தஞ்சை மன்னர் "" அஜய் மிஸ்ராவின் மகனின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது "" இதுதான் பலிகடாயென்பது
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
07-அக்-202117:21:35 IST Report Abuse
Kannan Sayed Yakoob. தமிழகத்தில் கோயம்பத்தூரில் இஸ்லாமியர்கள் குண்டுவைத்து அப்பாவி இந்து க்களை கொலை செய்யும்போது நீங்கள் உறங்கினீர்களா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X