லக்கிம்பூர் வன்முறை சம்பவம்; 2 பேர் கைது| Dinamalar

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்; 2 பேர் கைது

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (15)
Share
லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், உ.பி., அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுடைய ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜய் மிஸ்ரா மகனை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய்
Uttar Pradesh, Lakhimpur Kheri, Arrested, லக்கிம்பூர், வன்முறை சம்பவம், 2 பேர் கைது

லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், உ.பி., அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுடைய ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜய் மிஸ்ரா மகனை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என குரல்கள் எழுந்தன. இந்நிலையில் உ.பி.,யைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது.


latest tamil news


தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.,07) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உ.பி., அரசு இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும், கடுமையான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும் கடிதம் எழுதியிருந்த இரு வழக்கறிஞர்களும் குற்றம் சாட்டினர்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உ.பி., அரசு வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ‛வழக்கில் யார், யாரை கைது செய்துள்ளீர்கள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்? வழக்கு விசாரணை எந்த நிலைமையில் உள்ளது?' எனக் கேள்வி எழுப்பியதுடன் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


latest tamil news





2 பேர் கைது


இந்நிலையில், லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜய் மிஸ்ராவின் மகனை போலீஸ் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X