இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற அப்துல் ரசாக் குர்னா

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நோபல்
NobelPrize, Literature, Abdulrazak Gurnah, NobelPrize2021, நோபல் பரிசு, இலக்கியம், அப்துல்ரசாக் குர்னா,

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,04 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.


latest tamil news


மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.,07) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசானது எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 21 வயதில் இருந்து பல நாவல்களை எழுதியுள்ள அப்துல் ரசாக்கிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் வாழ்வியல் பற்றிய நாவலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-அக்-202117:47:58 IST Report Abuse
வெகுளி விடியல் தலைவர் உடனடியாக விரச முத்துக்கு அகில உலக நோபல் பரிசு அறிவிக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X