பொது செய்தி

இந்தியா

மிசோரமில் ஒரே நாளில் 263 குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021
Share
Advertisement
அய்சால்: மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,302 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது; இதில் 263 பேர் குழந்தைகள் என்பதால் 3வது அலையின் அச்சம் ஏற்பட்டுள்ளது.மிசோரம் மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், 'மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,302 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 263 பேர் குழந்தைகள். மிசோரத்தில்

அய்சால்: மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,302 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது; இதில் 263 பேர் குழந்தைகள் என்பதால் 3வது அலையின் அச்சம் ஏற்பட்டுள்ளது.



latest tamil news



மிசோரம் மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், 'மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,302 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 263 பேர் குழந்தைகள். மிசோரத்தில் தற்போது 16,075 பேர் கோவிட் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 86,213 ஆக உள்ளது. நேற்று மட்டும் 6 பேர் உட்பட இதுவரை 341 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 6.84 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 4.59 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



இந்தியாவில் கோவிட் 3வது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என, வல்லுநர்கள் எச்சரித்திருந்த நிலையில், மிசோரமில் ஒரே நாளில் 263 குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அச்சத்தை ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X