அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களின் அடிப்படை பிரச்னையை அ.தி.மு.க., தான் தீர்க்கும்: தம்பிதுரை

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கரூர்: ‛‛இன்றைக்கு அ.தி.மு.க., தான் ஆளும் கட்சி. அ.தி.மு.க., மட்டுமே மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியும்,'' ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை தெரிவித்தார்.கரூரில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தானேஷ் முத்துகுமாரை ஆதரித்து வெள்ளியனை அருகே தம்பிதுரை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கரூர் மக்களுக்காக நான்
மக்களின் அடிப்படை பிரச்னையை அ.தி.மு.க., தான் தீர்க்கும்: தம்பிதுரை

கரூர்: ‛‛இன்றைக்கு அ.தி.மு.க., தான் ஆளும் கட்சி. அ.தி.மு.க., மட்டுமே மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியும்,'' ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை தெரிவித்தார்.

கரூரில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தானேஷ் முத்துகுமாரை ஆதரித்து வெள்ளியனை அருகே தம்பிதுரை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கரூர் மக்களுக்காக நான் மீண்டும் மேலவையில் குரல் கொடுத்து வருகிறேன். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க., கட்சிக்கு ஓட்டளித்தால் மட்டுமே உள்ளாட்சியில் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று ஓட்டு கேட்கிறார்கள்.

ஆனால், இன்றைக்கு இந்தியாவை ஆளுகின்ற கட்சி பா.ஜ.,வில் மோடி தான் பிரதமராக உள்ளார், மோடி நினைத்தால் மட்டுமே எதும் நடக்கும். அதனுடன் கூட்டணி கட்சி இருப்பது அ.தி.மு.க,, அதனால் ஆளும் கட்சி அ.தி.மு.க., தான்; தி.மு.க., இல்லை. தமிழக அமைச்சர் மத்திய அரசிடம் சென்று நிதி வழங்குங்கள் என்று அங்கு தான் கேட்கிறார்கள், அதனால் தி.மு.க., ஆளும் கட்சி இல்லை.

இந்தியாவை ஆளும் கட்சியுடன் அ.தி.மு.க., இருக்கிறது. மக்களின் குறைகளை அ.தி.மு.க., தான் நிறைவேற்றும், டில்லிக்கு அ.தி.மு.க., காவடி தூக்கிறார்கள் என்றார்கள், ஆனால், இப்போது அதற்கு மேல் தூக்கிறவர்கள் தி.மு.க., உள்ளாட்சிக்கு டில்லியில் இருந்தான் பணம் கொடுக்கிறார்கள். தி.மு.க.,வுக்கு அதிகாரம் இல்லை. உண்மையான அதிகாரம் டில்லியில் தான் இருக்கிறது.. இவ்வாறு ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-202109:33:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆனா ஆடீம்காவை மக்கள் தீர்த்து கட்டிட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X