பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்; 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் பிரசாரம் இன்று (அக்.,07) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், கடந்த 6 மற்றும் வரும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக மாநில
Tamilnadu, Local Body Election, Second Phase, Election Campaign, உள்ளாட்சி தேர்தல், தமிழகம், பிரசாரம், ஓய்ந்தது, நிறைவு, இரண்டாம் கட்ட தேர்தல்

சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் பிரசாரம் இன்று (அக்.,07) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், கடந்த 6 மற்றும் வரும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 6ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை மறுநாள் (அக்.,9) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.


latest tamil news


முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 41.93 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளித்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 34,65,724 பேர் ஓட்டளிக்க உள்ளனர். இந்த 2ம் கட்ட தேர்தலில், 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
07-அக்-202123:46:56 IST Report Abuse
PRAKASH.P Voting for how many times .. our public money mostly wasting
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X