வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க கலெக்டருக்கு மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க கலெக்டருக்கு மனு

Added : அக் 07, 2021
Share
நாமக்கல்: 'வளையப்பட்டி பகுதியில், உழவர் சந்தை அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழக தலைவர் செல்ல ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர், நாமக்கல் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் தாலுகா வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பது, விவசாயிகள், மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நாமக்கல்,

நாமக்கல்: 'வளையப்பட்டி பகுதியில், உழவர் சந்தை அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழக தலைவர் செல்ல ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர், நாமக்கல் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் தாலுகா வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பது, விவசாயிகள், மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி ஒன்றியம், திருச்சி மாவட்டம், தொட்டியம் ஆகிய அனைத்துப் பகுதிகளின் மையப்பகுதியாக, வளையப்பட்டி அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில், ஆயிரக்காணக்கான விவசாயிகள் காய்கறிகள், சின்ன வெங்காயம், கீரை வகைகள், பூக்கள் ஆகியவற்றை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை அறுவடை செய்து, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யும் சூழ்நிலை உள்ளது. வளையப்பட்டியில், போதுமான இடவசதி உள்ளதால், அப்பகுதியில், உழவர் சந்தை அமைத்தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், பயனுள்ளதாக அமையும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X