சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் பல்கலை முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : அக் 07, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.வேலுார் மாவட்டம், சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலையின் கீழ் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும்
திருவள்ளுவர் பல்கலை முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேலுார்: வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
வேலுார் மாவட்டம், சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலையின் கீழ் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் வருகின்றன. இங்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக திருவாரூரைச் சேர்ந்த அசோகன் என்பவர் 2013-14ம் ஆண்டுகளில் பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று காட்பாடி அருகே வி.ஜி.ராவ் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவர் வருமானத்திற்கு அதிகமாக 20 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் சேர்த்ததாக ஏராளமான புகார்கள் வந்தன.
இந்நிலையில், இன்று காலை 6:00 மணிக்கு அவர் வீட்டிற்கு வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் இருந்து வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. மொபைல் போனில் யாருடனும் பேச அனுமதிக்கவில்லை. அதில், வருமானத்திற்கு அதிகமாக அவர் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படும் ஏராளமான சொத்து பத்திரங்கள், ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகத்தை கைப்பற்றியுள்ளனர்.
அதில், அசோகன் பணியாற்றிய போது, அவரது தொடர்பில் இருந்த அலுவலர்கள் மற்றும் கடலுார் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள அவரது நண்பர்கள் பலரது விபரம் சிக்கியுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனைக்கு பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X