பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் அரசு கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், செஞ்சுருள் சங்கம் மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில், மாணவ, மாணவியருக்கான தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தோல் பரிசோதனை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். 'தொழுநோய் குறித்த உண்மைகள்' என்ற தலைப்பில், அந்நோயின் ஆரம்ப அறிகுறிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும்

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், செஞ்சுருள் சங்கம் மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில், மாணவ, மாணவியருக்கான தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தோல் பரிசோதனை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். 'தொழுநோய் குறித்த உண்மைகள்' என்ற தலைப்பில், அந்நோயின் ஆரம்ப அறிகுறிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) ஜெயந்தினி பேசினார். 'தொழுநோயின் தோற்றம் மற்றும் தவறான நம்பிக்கைகள்' என்ற தலைப்பில், நலக்கல்வியாளர் லட்சுமிநாராயணன் பேசினார். தொடர்ந்து, 80 மாணவ, மாணவியருக்கு தோல் பரிசோதனை முகாம் நடந்தது. தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் வெஸ்லி, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X