பொது செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் அனைத்து பணியாளர்கள், உதவி விற்பனையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்க

நாமக்கல்: காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் அனைத்து பணியாளர்கள், உதவி விற்பனையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஓரகடம் டாஸ்மாக் மதுபான கடையில், சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்துள்ளார். விற்பனையாளர் ராமு என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X