பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதி இல்லாத 80 நாட்டு துப்பாக்கி ஒப்படைப்பு: எஸ்.பி., தகவல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: ''கொல்லிமலையில், அனுமதி இல்லாத, 80 நாட்டுத்துப்பாக்கிகள், போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன,'' என, நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் கூறினார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளவர்கள், மலைப்பகுதிகளில் வேட்டையாட சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துள்ளதை தடுக்கும் வகையில், 'பொதுமக்கள், தாமாக முன்வந்து துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில்

நாமக்கல்: ''கொல்லிமலையில், அனுமதி இல்லாத, 80 நாட்டுத்துப்பாக்கிகள், போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன,'' என, நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் கூறினார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளவர்கள், மலைப்பகுதிகளில் வேட்டையாட சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துள்ளதை தடுக்கும் வகையில், 'பொதுமக்கள், தாமாக முன்வந்து துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பவர்களின் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்க மாட்டோம்' என, எஸ்.பி, சரோஜ்குமார் தாகூர் அறிவித்திருந்தார். அதற்கு பலனாக, இதுவரை, 80 உரிமமில்லாத நாட்டு துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை, 110 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், 80 துப்பாக்கிகள் தானாக ஒப்படைக்கப்பட்டது. அதற்கு போலீசார் அடங்கிய குழுவினர், பொதுமக்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும், 30 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், இது குறைவுதான். இம்மாவட்டத்தில், 500 முதல், 1,000 நாட்டு துப்பாக்கிகள் அனுமதி இல்லாமல் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். இன்னும் அவகாசம் இருக்கிறது. ஊர் தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் மூலம், பொதுமக்கள், தங்களிடம் உள்ள நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைத்துவிடலாம். இதுவரை, மாவட்டத்தில், 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, கத்தி, அரிவாள், துப்பாக்கி என, 35 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அதிக அளவிலும், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டியில் கொஞ்சமும், மொளசி, திருச்செங்கோட்டில் மிக குறைவாகவும், நாட்டுத்துப்பாக்கிகள் உள்ளன. மேலும், கள்ளத்துப்பாக்கியை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு அல்லது 94981 01020 என்ற எண்ணிற்கோ, மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவித்தால், காவல் துறையினர் அதை கைப்பற்றி உரிய முறையில் பறிமுதல் செய்துகொள்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X