பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு திட்டங்கள் விரைவாக கிடைக்க கோரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: 'விசைத்தறிக்கு மத்திய அரசு திட்டங்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், எம்.பி., கணேசமூர்த்தியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் கருணாநிதி கூறியதாவது: கோவை மண்டல ஜவுளித் துறை ஆணையர் அலுவலகத்தின் வாயிலாக

பள்ளிபாளையம்: 'விசைத்தறிக்கு மத்திய அரசு திட்டங்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், எம்.பி., கணேசமூர்த்தியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் கருணாநிதி கூறியதாவது: கோவை மண்டல ஜவுளித் துறை ஆணையர் அலுவலகத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் நடப்பு திட்டங்களான திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம்.ஒருங்கிணைந்த பதனிடும் மேம்பாட்டு திட்டங்களின் பயன்கள் விரைவாக விசைத்தறிகளுக்கு கிடைக்க வேண்டும். மேலும் பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தின் வாயிலாக மீண்டும் தொடர்ந்து கடனுதவி வழங்க வேண்டும். உற்பத்தி திறனை மேம்படுத்த மத்திய அரசு மானியத்துடன் வழங்கும் கடனுதவி திட்டம் சிறிய விசைத்தறியாளர்களும் பயன்பெறும் வகையில் கொண்டு வர வேண்டும் என, எம்.பி.,யிடம் கோரிக்கை வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X