புரட்டாசி மகாளய அமாவாசை: காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி மகாளய அமாவாசை: காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Added : அக் 07, 2021
Share
கரூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.ஆவணி மாதம் பவுர்ணமி தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை வரக்கூடிய, 15 நாட்கள், மகாளயம் எனப்படும் பித்ருக்களுக்குரிய காலமாகும். அப்போது, மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவர் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு மகாளயம் கடந்த, 21ல் தொடங்கிய நேற்று வரை

கரூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.


ஆவணி மாதம் பவுர்ணமி தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை வரக்கூடிய, 15 நாட்கள், மகாளயம் எனப்படும் பித்ருக்களுக்குரிய காலமாகும். அப்போது, மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவர் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு மகாளயம் கடந்த, 21ல் தொடங்கிய நேற்று வரை இருந்தது. இந்த நாட்களை பயன்படுத்திக் கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும் என்றும், மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால், அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தில் நெரூர், வாங்கல், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரம் ஏராளமான பொதுமக்கள் காவிரியில் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். காவிரிக் கரையில் வாழை இலையில் முன்னோர் விரும்பி உண்ணும் உணவுகளையும் படைத்திருந்தனர். பின்னர் சிறப்பு வழிபாடும் நடத்தினர்.


* மாயனூர் காவிரி கரை அருகில் செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு பல்வேறு அபி ?ஷகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


* கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கருப்பத்தூர், மாயனூர் ஆகிய காவிரி கரைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X