பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வாஷிங் மிஷின் பரிசு: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கரூர்: ''தடுப்பூசி முகாமில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மிஷின் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்,'' என, கலெக்டர் பிரபு சங்கர் கூறினார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: கரூர்

கரூர்: ''தடுப்பூசி முகாமில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மிஷின் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்,'' என, கலெக்டர் பிரபு சங்கர் கூறினார்.


கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி, ஆறு லட்சத்து, 22 ஆயிரத்து, 735 பேரும், இரண்டாவது தவணையை, ஒரு லட்சத்து, 68 ஆயிரத்து, 650 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத இலக்கை எய்திடும் வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவர்களின் பெயர், முகவரி, மொபைல் எண், ஆதார் எண் போன்ற விபரங்கள் குறித்து வீடுவீடாக சென்று கணக்கெடுத்து சேகரிக்க வேண்டும். கணக்கெடுப்பாளர் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபர்களை அழைத்துவருகின்றனரோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு நபருக்கு, 5 ரூபாய் வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அன்றைய முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மிஷின், இரண்டாம் பரிசாக கிரைண்டர், மூன்றாம் பரிசாக மிக்ஸி, நான்காம் பரிசாக, 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக, 100 நபர்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், டி.ஆர்.ஓ., (நிலமெடுப்பு) கவிதா, சப் -கலெக்டர் சைபுதீன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X