சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடுக்கல் வாங்கல் தகராறு: மூன்று பேர் மீது வழக்கு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கரூர்: கொடுக்கல் வாங்கல் குறித்து வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் அரசு காலனியை சேர்ந்தவர் குணசேகரன், 58. டெய்லர். அதே பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம்; கூலி தொழிலாளி. இரண்டு பேருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரண்டு பேருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இப்ராஹிம் கத்தியை காட்டி

கரூர்: கொடுக்கல் வாங்கல் குறித்து வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் அரசு காலனியை சேர்ந்தவர் குணசேகரன், 58. டெய்லர். அதே பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம்; கூலி தொழிலாளி. இரண்டு பேருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரண்டு பேருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இப்ராஹிம் கத்தியை காட்டி மிரட்டியது மட்டுமல்லாது, குணசேகரையும் குத்தியுள்ளார். அவர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்ராஹிம் மீது வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 34. கரூர் வெங்கமேடு குமார். இவர்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் பசுபதிபாளையத்தில் இரண்டு பேருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, குமார், அவரது நண்பர் தமிழ் ஆகியோர் வெற்றிவேலை தாக்கினர். காயமடைந்த வெற்றிவேல், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு பேர் மீதும் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X