நொய்யல் பாலத்தில் விளக்கு வசதி இல்லை

Added : அக் 07, 2021
Share
Advertisement
கரூர்: நொய்யல் ஆற்றுப் பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர். கரூர் - ஈரோடு சாலையில், 1955ல் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக, ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. பாலம் கட்டப்பட்டு, 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் அதில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.

கரூர்: நொய்யல் ஆற்றுப் பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர். கரூர் - ஈரோடு சாலையில், 1955ல் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக, ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்கின்றன. பாலம் கட்டப்பட்டு, 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் அதில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. பாலம் வழியாக இரவில் நடந்து செல்லும் மக்களிடம், வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும், பாலம் ஆற்றுப் பகுதிகளில், இருட்டைப் பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் தாராளமாக நடக்கின்றன. ஆற்றுப் பாலத்தில் மின்கம்பங்கள் அமைத்து, மின்விளக்கு வசதி செய்ய மாவட்ட நிர்வாகம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X