அடிப்படை வசதியில்லாத மயானத்தால் அவதி| Dinamalar

அடிப்படை வசதியில்லாத மயானத்தால் அவதி

Added : அக் 07, 2021
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, பொருந்தலூர் பஞ்., பொன்னம்பட்டி காலனியில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மயானம் அமைந்துள்ளது. ஆனால் இவர்களுக்கான மயான இடத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் மூலம் கற்களை கொட்டி வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. மேலும், மயானத்திற்கு சாலை,

குளித்தலை: குளித்தலை அடுத்த, பொருந்தலூர் பஞ்., பொன்னம்பட்டி காலனியில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மயானம் அமைந்துள்ளது. ஆனால் இவர்களுக்கான மயான இடத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் மூலம் கற்களை கொட்டி வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. மேலும், மயானத்திற்கு சாலை, எரிமேடை, தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லை. மழை காலங்களில் உடலை புதைக்க குழி தோண்டும் போது அருகில் உள்ள மழை நீர் ஊற்றுகளால் புதைக்க முடியவில்லை. மயானத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X