பிரதான சாலைகளில் பார்க்கிங்: போக்குவரத்து நெரிசலால் தவிப்பு| Dinamalar

பிரதான சாலைகளில் 'பார்க்கிங்': போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

Added : அக் 07, 2021
Share
கரூர்: கரூரில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கரூர் நகராட்சியின் பிரதான சாலையாக கோவை சாலை, ஜவஹர் பஜார், காமாட்சியம்மன் கோவில் வீதி, செங்குந்தபுரம் உள்ளன. இங்குள்ள வர்த்தக நிறுவன கட்டடங்களில் பார்க்கிங் வசதி இல்லை. பைக் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்கள், அவற்றை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால்

கரூர்: கரூரில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


கரூர் நகராட்சியின் பிரதான சாலையாக கோவை சாலை, ஜவஹர் பஜார், காமாட்சியம்மன் கோவில் வீதி, செங்குந்தபுரம் உள்ளன. இங்குள்ள வர்த்தக நிறுவன கட்டடங்களில் பார்க்கிங் வசதி இல்லை. பைக் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்கள், அவற்றை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: கோவை, ஜவஹர் பஜார் சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அதிகமுள்ளன. பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா ரவுண்டானா பகுதியில் ஜவுளிக் கடைகள், பேக்கரிகள் உள்ளன. இதனால், இங்கு எப்போதும் வாகனப் போக்குவரத்து இருக்கும். வாகனங்களில் வருபவர்கள், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், சாலையோரத்திலேயே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, ஜவஹர் பஜார் செல்லும் வலதுபுற சாலையில், ஒரு பக்கம் இருசக்கர வாகனங்களும், மறுபக்கம் கார் முதலான வாகனங்களும் வரிசையாக நிற்கின்றன. இதேபோல், ரவுண்டானாவிலிருந்து, கோவை செல்லும் சாலையோரத்தில் தான் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஏற்கனவே சென்டர் மீடியன் மூலம் பிரிக்கப்பட்டதால், சாலை அகலம் குறைவாக உள்ளது. அதிலும் பார்க்கிங் வாகனங்கள் அடைத்துக் கொண்டு விடுவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் திண்டாட்டமாகி விடுகிறது. இதனால், ரவுண்டானாவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X