பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதி குறைவால் தவிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால், பயணிகள் திணறி வருகின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தொழில் நகரமாக கரூர் விளங்குவதால், பல்வேறு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கரூர் வருகின்றனர். பஸ்

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால், பயணிகள் திணறி வருகின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தொழில் நகரமாக கரூர் விளங்குவதால், பல்வேறு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கரூர் வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்கார கூட வசதி இல்லாமல், பல மணி நேரம் நிற்கவேண்டியுள்ளது. இடநெருக்கடியாக உள்ளதால் பகல் மற்றும் மாலை நேரத்தில் பயணிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். மேலும் இருக்கைகள் சேதமான நிலையிலும் உள்ளன. குடிநீர் வசதி இருந்தலும், தொட்டி முன் தேங்கியுள்ள கழிவு நீரால் சுகாதாரமற்றதாக உள்ளது. சிலர் கையோடு கொண்டு செல்லும் வாட்டர் பாக்கெட்டுகளை கலந்து குடித்து விட்டு பாட்டில்களை கழிப்பறை வளாகத்திற்குள் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். ஒரு சிலர் போதையில் உடைத்து விட்டும் செல்கின்றனர். தற்போது பண்டிகை நெருங்குவதால் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க, கரூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வருகை தருவர். பயணிகளின் வசதிக்காக இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X