அறிவியல் ஆயிரம்
உயிரை கொல்லும் புகை
புகைப்பிடித்தல் கொரோனா பாதிப்பின் தீவிரத் தன்மையை அதிகரிக்கவும், அதனால் உயிரிழக்கும் அபாயத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, பிரிஸ்டல், நாட்டிங்ஹாம் பல்கலை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 4.21 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்கள், பலியானவர்களில் மற்றவர்களை விட புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட நபர்கள் 80 சதவீதம் அதிகம். புகைப்பிடிப்பது இருதய பாதிப்பு, பலவகை புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது.
தகவல் சுரங்கம்
விமானப்படை தினம்
நாட்டை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது. 1932 அக்.8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படை முக்கிய பங்காற்றியது. இயற்கை பேரழிவுகளின் போது, மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா.,வின் அமைதிப் படையிலும் இடம் பெற்றுள்ளது. 1.40 லட்சம் வீரர்கள் உள்ளனர். 1750 போர் விமானங்கள் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE