ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க மறுப்பு : மேலும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை: சொகுசு கப்பலில் போதை விருந்து விவகாரத்தில் கைதாகியுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்தது. மஹாராஷ்ட்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ஒருசொகுசு கப்பல் ஒன்றில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பயணிகள் போல படகில் ஏறி அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆர்யன்கான், ஜாமின் , மறுப்பு : 14 நாள் ,காவலில் உத்தரவு


மும்பை: சொகுசு கப்பலில் போதை விருந்து விவகாரத்தில் கைதாகியுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்தது.

மஹாராஷ்ட்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ஒருசொகுசு கப்பல் ஒன்றில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பயணிகள் போல படகில் ஏறி அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.


latest tamil news



இந்த வழக்கில் கைதான ஆர்யன் கான்,23 மும்பை கில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்.07 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு இன்று (அக்.07) விசாரணைக்கு வந்தது.
ஆர்யன்கான் கோர்ட்டில் ஆஜரானார். அவர் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே, போதை தடுப்பு பிரிவு போலீசார் தரப்பில் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் ஆகியோர் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மறுத்தார். அவரை மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


என்சிபி கோரிக்கை நிராகரிப்பு

ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவிட்டது. அதேநேரத்தில் ஆர்யன் கானிடம் வரும் 11 ம் தேதி வரையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற என்.சி.பி.,யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


ஜாமின் மனு மீது நாளை விசாரணை

இதனிடையே வழக்கில் ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் ஆர்யன்கான் தாக்கல் செய்த ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
08-அக்-202105:44:17 IST Report Abuse
Ram பாவம் போதை தெளிஞ்சு போச்சு
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
08-அக்-202105:39:32 IST Report Abuse
Girija கபில்சிபல் ஸ்டார்ட் அப்பீல் ம்யூசிக் , நீதிபதி மேஜைக்கே சென்று உரத்த குரலில் பேசி (கத்தி) சாந்தமாக (மிரட்டி) ஜாமீன் வாங்கி விடுங்கள் . ஆர்யா கான் நினைத்தால் அந்த சொகுசு கப்பலையே வாங்கிவிடுவார், மற்றவர்கள் எம்மாத்திரம் என்று ? என்று அவர் பணவலிமையை பறைசாற்றுங்கள். நீதிபதி என் சி பி அதிகாரிகளிடம் ஆர்யாவிடம் கண்ணே மணியே என்று ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் அவரது வக்கீல் முன்னிலையில் கொஞ்சி பேசி விசாரிக்க வேண்டும் என்பார் . மாற்றி மாற்றி பெயில் கொடுப்பார்கள் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நான் யாரவது ஆதாரத்தோடு வருவார்கள் என்று எதிர்பார்த்து இரண்டு வருடமாக காத்திருந்தேன் யாரும் வரவில்லை அதனால் அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்று சைங் தீர்ப்பு சொல்லுவார் . நிலைமை இப்படியிருக்க சினிமாவில் வரும் போலீஸ் அதிகாரி போல் சாக தற்போதைய அதிகாரிகள் தயாராக இல்லை . சி பி ஐ ரகோத்தமன் போல் தான்.
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
08-அக்-202101:59:54 IST Report Abuse
Venkatesh பாலிவுட் கான்'களின் ஆட்டம் தாங்கமுடியவில்லை, முடிந்த அளவுக்கு அவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்திய நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள். எல்லாம் பணத்திமிர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X