சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் ரூ 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் அசோகன். வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் குவிந்தன.வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடந்த சோதனையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, நிலம், அடுக்கு மாடி குடியிருப்பு,
 திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் ரூ 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல்

வேலுார்:வேலுார் காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் அசோகன். வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் குவிந்தன.

வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடந்த சோதனையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, நிலம், அடுக்கு மாடி குடியிருப்பு, பங்கு பத்திரம் மற்றும் நகை, பணம், 10 வங்கி பாஸ் புக், லாக்கர் கணக்கு விவரங்கள் போன்றவற்றை கைப்பற்றினர்.

வங்கி கணக்கை முடக்கவும், லாக்கரை திறந்து பார்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளர். அவரது காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள சொகுசு பங்களாவின் மதிப்பு பல லட்சம் ஆகும்.
10 மணி நேரம் அசோகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 2013- 14ம் ஆண்டில் அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த போது, தன் பதவியை தவறாக பயன்படுத்தி பணி நியமனம், மதிப்பெண் சான்று திருத்தி தேர்ச்சி பெற வைத்தல், மதிப்பெண் சான்று திருத்தும் பணிக்கு தனியார் நிறுவனத்தினரை டெண்டர் விடாமல் நியமித்தது, பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள 108 கல்லுாரிகளில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மோசடி, அங்கு புதிய பாட பிரிவுகளை தொடங்குவதிலும் லஞ்சம் பெற்றது, பகுதி நேரம், தொகுப்பூதியத்தில் வேலை செய்த ஊழியர்களை பணி நிரந்திரம் செய்தது என பல்வேறு மோசடியில் அவர் ஈடுபட்டு வருமானத்தை விட அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தது தெரியவந்தது.

திருவாரூர் மாவட்டம், மேலஎருக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். அங்கும் அவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து வேலுார் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 6 போலீசார் அங்கும் சோதனை நடத்தி ஏராளமான சொத்து பத்திரங்களை கைப்பற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X