கரூரை புறக்கணித்தது காரணம் இது தானா ? செந்தில்பாலாஜி தான் அனைத்திலும் பெயர் எடுக்கின்றார் என்னை கண்டுகொள்ள கூட மாட்டீங்கிறாங்க ? ஜோதிமணி டீம் பப்ளிசிட்டி கரூரில் எடுபடலையா ?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கரூரை புறக்கணித்தது காரணம் இது தானா ? செந்தில்பாலாஜி தான் அனைத்திலும் பெயர் எடுக்கின்றார் என்னை கண்டுகொள்ள கூட மாட்டீங்கிறாங்க ? ஜோதிமணி டீம் பப்ளிசிட்டி கரூரில் எடுபடலையா ?

Added : அக் 07, 2021
Share
வருங்கால தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வி ஜோதிமணி, வருங்கால மத்திய அமைச்சர் அக்கா ஜோதிமணி என்றெல்லாம் ஒரு அடைமொழி கொடுக்கவில்லை என்றால் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு எந்த இட்த்திற்கு செல்கின்றாரோ, அந்த இடத்திற்கு ஒரு மதிப்பே இருக்காதாம், அந்த நிலையில், தன்னை தானே பிரபலப்படுத்துவதற்கு டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப், பேஸ்புக் மூலமே அரசியல் நட்த்துபவர் தமிழக
கரூரை புறக்கணித்தது காரணம் இது தானா ? செந்தில்பாலாஜி தான் அனைத்திலும் பெயர் எடுக்கின்றார் என்னை கண்டுகொள்ள கூட மாட்டீங்கிறாங்க ? ஜோதிமணி டீம் பப்ளிசிட்டி கரூரில் எடுபடலையா ?

வருங்கால தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வி ஜோதிமணி, வருங்கால மத்திய அமைச்சர் அக்கா ஜோதிமணி என்றெல்லாம் ஒரு அடைமொழி கொடுக்கவில்லை என்றால் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு எந்த இட்த்திற்கு செல்கின்றாரோ, அந்த இடத்திற்கு ஒரு மதிப்பே இருக்காதாம், அந்த நிலையில், தன்னை தானே பிரபலப்படுத்துவதற்கு டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப், பேஸ்புக் மூலமே அரசியல் நட்த்துபவர் தமிழக அளவில் யார் என்றால், அதில் ஜோதிமணி தான் நெம்பர் ஒன்,

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில்., பல்வேறு கண்டனங்களும் அதற்கான ஆர்பாட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆர்பாட்டம் நடத்தாமல், திருச்சியில் ஆர்பாட்டம் நடத்தினார். இதுக்கூட பரவாயில்லை, ஜோதிமணியின் ஊர் பக்கம் அருகே உள்ள க.பரமத்தியில் உள்ள 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரையும், கரூர் மாவட்ட ஊராட்சி குழு வார்டு 8 ல் போட்டியிடும் திமுக வேட்பாளரையும் கூட ஆதரித்து பிரச்சாரம் நடத்தாமல் புறக்கணித்துள்ளாராம்.

காரணம், தமிழக அளவில் தற்போது ஜோதிமணி தமிழக தலைவராக ஆவதற்கும், வருங்காலத்தில் இதே கரூர் தொகுதியில் போட்டியிட்டு, ஜெயித்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டால், மத்திய அமைச்சர் ஆவதற்காக பெரும் முயற்சி எடுத்துவருவது ஒரு புறம், இருந்தால், மற்றொரு புறம் திமுக வை சார்ந்த மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி இருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் மற்றும் திமுக பிரமுகர்கள் யாரும் என்னை (ஜோதிமணியை) கண்டுகொள்வதில்லையாம், ஆதலால் தான் இந்த அடுத்த மாவட்டத்தில் அரசியல் செய்து வருகின்றாராம் ஜோதிமணி.

இது ஒருபுறம் இருக்க, கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் எம்.பி முதல் ரவுண்டிலேயே லட்சக்கணக்கான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறும் போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்தியாவில் இரண்டு இடங்களில் போட்டியிட உத்தரப் பிரதேச அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணியை விட 55 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார்.

ஆனால், கேரளாவில் உள்ள வயநாட்டில் இந்திய கம்யூனீஸ்ட் கட்சியை விட ராகுல் காந்தி
4 லட்சத்து 2 ஆயிரத்து 692 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது, செய்தியாளர் ஒருவர், அமேதியில் கை விட்டு விட்டது. ஏன், வயநாட்டில் தலைவர் ராகுல்காந்தி ஜெயித்து விட்டாரே, காங்கிரஸ் கட்சி சார்பில் வெடி வைக்கலைங்களா ? மேடம் என்று கேட்ட்தற்கு அந்த செய்தியாளரிடம் மத்தியில் போய் விட்டது (அதாவது பாஜக ஆட்சி அமைந்து விட்டது) என்று கூறியுள்ளார்.

ஒரு சாதாரண காங்கிரஸ் கட்சி தொண்டன் கூட ராகுல்காந்தி வெற்றியடைந்ததை கொண்டாடி இருப்பார்கள், ஆனால், காங்கிரஸ் எம்.பி ஆவதற்கு முன்னரே இவர் மத்தியில் மத்திய அமைச்சர் ஆக முடியவில்லையே என்று வேதனையில் இருந்தது அன்று தெரிந்தது என்கின்றனர். அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினரும், திமுக கூட்டணி கட்சியினரும்.

ஆகவே, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் அதுவும் வயதானவர்களை கரூர் மாவட்ட அளவில் ஒதுக்கி வருவதாகவும் புகார் மேல், புகார்கள் குவிந்த வண்ணம் ஒரு புறம் இருக்க, தமிழக அளவில் ஒவ்வொரு மாநில அமைச்சர்களையும் தான் சந்தித்ததாகவும், எதற்காக என்று அவரே அவரது அலுவலக ஆட்களை விட்டு டுவிட்டர் பதவுகளையும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளையும் பதிவிட்டு அண்மைக்காலமாக வருகின்றார்.

இந்நிலையில் கூட்டணி கட்சியான திமுக கட்சி நிர்வாகிகளையும் உள்ளாட்சி தேர்தலில் கழட்டி விட்ட ஜோதிமணியின் செயல் இப்பகுதியில் கூட்டணி கட்சியின் தர்மத்தினை காற்றில் பறக்க விட்ட செயல் என்கின்றனர் கரூர் மாவட்ட திமுக வினரும் மற்ற கூட்டணி கட்சியினரும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X