சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

குட்டையை குழப்பும் கெஜ்ரிவால்!

Added : அக் 07, 2021
Share
Advertisement
குட்டையை குழப்பும் கெஜ்ரிவால்!'உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடியாக இருக்கிறதே; முடியலை...' என, கதறுகிறார் டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா. இவர், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக பதவி வகித்தபோது லஞ்ச புகாரில் சிக்கியவர். இவர், டில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டபோது, முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும்

அக்கம் பக்கம்


குட்டையை குழப்பும் கெஜ்ரிவால்!



'உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடியாக இருக்கிறதே; முடியலை...' என, கதறுகிறார் டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா. இவர், சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக பதவி வகித்தபோது லஞ்ச புகாரில் சிக்கியவர். இவர், டில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டபோது, முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் போலீஸ் கமிஷனர் பதவியை ஓரளவு திறம்பட செய்து வருகிறார் அஸ்தானா. டில்லி போலீஸ், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது. எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கீழ் தான் ராகேஷ் அஸ்தானா செயல்பட வேண்டும். டில்லியின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து அமித் ஷாவிடம், ராகேஷ் அஸ்தானா அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். இது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் சட்ட விதிமுறைகளை மீறி எதுவும் செய்ய முடியாததால், ராகேஷ் அஸ்தானாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். தினமும் காலையில் டில்லி போலீசாரையும், ராகேஷ் அஸ்தானாவையும் குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கடும் கோபத்தில் உள்ள அஸ்தானா, 'அமித் ஷாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லி விடுகிறேன். ஆனால் கெஜ்ரிவால் இடையில் புகுந்து குட்டையை குழப்புகிறார். என்ன செய்வது என்றே தெரியவில்லை' என்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X