பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த டாடா குழுமத் தலைவர்: உச்சம் தொட்ட பங்கு விலை

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தமிழக முதல்வர் ஸ்டாலினை புதனன்று சந்தித்து பேசினார். அவரிடம் தமிழக போர்டு தொழிற்சாலையை ஏற்று நடத்தும் படி முதல்வர் கோரிக்கை வைத்ததாக செய்தி வெளியானது. அதனால் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 12.6% உயர்ந்து 52 வார உச்சத்தை தொட்டது. அமெரிக்க கார் தொழிற்சாலை நிறுவனமான போர்டுக்கு தமிழகம் மற்றும் குஜராத்தில் ஆலைகள்

சென்னை: டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தமிழக முதல்வர் ஸ்டாலினை புதனன்று சந்தித்து பேசினார். அவரிடம் தமிழக போர்டு தொழிற்சாலையை ஏற்று நடத்தும் படி முதல்வர் கோரிக்கை வைத்ததாக செய்தி வெளியானது. அதனால் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 12.6% உயர்ந்து 52 வார உச்சத்தை தொட்டது.



latest tamil news



அமெரிக்க கார் தொழிற்சாலை நிறுவனமான போர்டுக்கு தமிழகம் மற்றும் குஜராத்தில் ஆலைகள் உள்ளன. 200 கோடி டாலர் நஷ்டத்தில் உள்ளதால் விற்பனை வாய்ப்பு மந்தமான நாடுகளில் ஆலைகளை மூட முடிவெடுத்தது. அந்த வரிசையில் இந்தியாவிலுள்ள ஆலைகளை மூடுகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்.

இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலினை டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் நேற்று (அக்., 06) சந்தித்து பேசினார். அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, முதல்வரின் முதன்மைச் செயலர் உதயச் சந்திரன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

சந்திரசேகரனிடம் சென்னைக்கு அருகிலுள்ள போர்டு தொழிற்சாலையை ஏற்று நடத்த முதல்வர் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து இன்று டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் மளமளவென உயர்ந்து 52 வார உச்சத்தை தொட்டது. டாடா மோட்டார்ஸ் கார் உள்ளிட்ட பயணிகள் வாகன உற்பத்தியில் தனித்துவமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் விற்பனை வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் போட்டியாளர்கள் உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


latest tamil news



டாடா நிறுவனமோ ஆலைகளை 2 ஷிப்டுகளாக இயக்கி வருகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலைகளை நிறுவியுள்ளது. அதன் மின்சார வாகனங்களும் சந்தையில் வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும் தமிழ்நாட்டில் அதற்கு கார் தொழிற்சாலை இல்லை. எனவே போர்டு ஆலையை கையகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை 81,229 வாகனங்களை விற்றுள்ளது. விற்பனை விகிதம் 51% அதிகம் ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
13-அக்-202113:06:37 IST Report Abuse
ram சோறு வீரமணி எதாவது ஏடாகூடமாக பார்ப்பான் அது எது என்று சந்திரசேகரை சொல்லி விட போகிறார், அப்புறம் டாடா கம்பெனி இங்கு வாராது,
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
12-அக்-202119:20:04 IST Report Abuse
spr சிறப்பான முயற்சி இருவருக்குமே பாராட்டுக்கள் இதை விட அதிக நஷ்டத்தில் இயங்கிய பல தொழிற்சாலைகளை வெற்றிகரமக மீட்ட பெருமை டாடா நிறுவனத்திற்கு உண்டு எனவே இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். ஆனால் ஏற்கனவே ஏர் இந்தியாவை வாங்கி பல கோடி நஷ்டம் உண்டான நிலையில் திறமையின்மையை ஊக்குவிக்கும் வகையில் நிபந்தனைகளை விதிக்காமல் இருக்க வேண்டும். முடிந்தவரை மத்திய மானில அரசும் நிதியுதவி செய்தால் இந்தத் தொழிற்சாலையில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் தயாரிக்க முடியும் மாடு அதிக அளவில் பால் தர வேண்டுமானால் அதற்கு பொட்டு புண்ணாக்கு போன்ற சத்து மிகுந்த உணவைத் தரத்தான் வேண்டும் தனியார் நிறுவனம் லாபகரமாக இயங்குமானால் அதனால் பல தொழிலாளர் ஆதாயம் பெறுவார்கள் என்றால் தனியாருக்கு அரசு ஊக்கம் தருகிறது என்ற வாதத்தை ஒதுக்கி வைப்போம் ஆனால் மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் அதுவும் பிரச்சினையே எனினும் பல தொழிலாளர்கள் வாழ்வு நலம் பெற இம்முயற்சி வெற்றி பெறட்டும்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
11-அக்-202110:48:56 IST Report Abuse
Hari இது கார்புரேட்டுகளின் சந்திப்பாக யாரும் நினைத்துவிடவேண்டாம் இதை நம்புங்கள் ப்ரோ.தமிழக அரசே இதை எடுத்து நடத்தலாம் என கம்யூனிஸ்ட் அருணன் கேட்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X