சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி: தமிழகம், மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தும் முயற்சிகளை துவங்கி விட்டன. தேசிய பாடத்திட்ட கொள்கையை தமிழகம் செயல்படுத்தவில்லை. அதனால், பள்ளி கல்வி தரம் குறைந்து, தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை, நம் மாணவர்கள் பெறவில்லை. எனவே, புதிய கல்வி கொள்கையை, தமிழகம் செயல்படுத்த


'டவுட்' தனபாலு

அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி: தமிழகம், மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தும் முயற்சிகளை துவங்கி விட்டன. தேசிய பாடத்திட்ட கொள்கையை தமிழகம் செயல்படுத்தவில்லை. அதனால், பள்ளி கல்வி தரம் குறைந்து, தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை, நம் மாணவர்கள் பெறவில்லை. எனவே, புதிய கல்வி கொள்கையை, தமிழகம் செயல்படுத்த வேண்டும். அப்போது தான், நம் மாணவர்கள் முன்னேற முடியும்.

'டவுட்' தனபாலு: மாணவர்கள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை; மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை பின்பற்ற மாட்டோம் என, தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதனால், உங்கள் முயற்சி வீண் தான் என்பதில், கல்வியாளர்களுக்கு, 'டவுட்டே' இல்லை!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
இயற்பியல் துறைக்கான 'நோபல்' பரிசை அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். இந்தியாவில் 23 ஐ.ஐ.டி.,கள், ஐ.ஐ.எஸ்சி., நுாற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்ல முடியவில்லையே ஏன்?

'டவுட்' தனபாலு: இதற்கான காரணம், அனைவரும் அறிந்தது தான். எல்லாவற்றிலும் புகுந்த அரசியல், கல்வியிலும் புகுந்து விட்டது என்பது தான் அது. சீரிய முறையில் கல்வி அளிக்கும் மத்திய கல்வி முறையை, இங்குள்ள அரசியல் தலைவர்கள் எதிர்க்கின்றனர். சிறந்த கல்வி நிறுவனங்களில் பின்வாசல் வழியே அரசியல் தலைவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை நுழைக்கின்றனர். பிறகு எப்படி இங்கு பரிசு கிடைக்கும். வெறும் பட்டங்கள் மட்டும் தான் கிடைக்கும் என்பதில், யாருக்கும், 'டவுட்'டே இல்லை!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
உள்ளாட்சி தேர்தல் நடந்த பல ஓட்டுச்சாவடிகளில், முகவர்களை மிரட்டி உள்ளனர். குறுக்கு வழியில் வெற்றி பெற தேர்தல் ஆணையத்தையும், ஜனநாயக விரோத செயலையும், தி.மு.க., நம்பி உள்ளது. தேர்தல் நேர்மையாக நடந்தால், அ.தி.மு.க., கூட்டணி தான் அமோக வெற்றி பெறும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நியாயமான முறையில் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. நியாயமாக நடந்திருந்தால் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும் என்கிறீர்கள். அப்போ, உங்கள் கட்சி மற்றும் கூட்டணிக்கு தோல்வி தானோ என்ற, 'டவுட்'டை உங்கள் பேச்சு கிளப்புது!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-அக்-202115:17:40 IST Report Abuse
D.Ambujavalli பூத் கேப்ச்சரிங், கள்ள ஒட்டு எல்லாவற்றிலும் கரை கொண்டவர்கள்தான் இரு கட்சியினரும் தோல்விக்கு இப்போதே காரணம் தயார் செய்துகொள்கிறார்கள்
Rate this:
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
08-அக்-202113:20:16 IST Report Abuse
S.Aruna இந்தியாவில் 23 ஐ.ஐ.டி.,கள், ஐ.ஐ.எஸ்சி., இருந்தும் நோபல் பரிசு வெல்ல முடியவில்லையே ஏன் என புரிதலில்லாமல் விளக்கமளித்துள்ள 'டவுட்' தனபாலு அவர்களே, இங்கெல்லாம் அடுத்தவர் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு எந்த அறிவாளிகள் ஆண்டுகொண்டுள்ளனர் என தெரியாதமாதிரி நடிக்கவேண்டாம். தகுதியற்ற உயர்சாதி அரசியலே கையறு நிலைக்கு காரணம். வாழ்க்கையில் முன்னேறும் முனைப்புல்லவரால் மட்டுமே சாதிக்க இயலும். சாதிஅரவணைப்பில் வாழும் எவராலும் உயரம் தொட முடியாது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-அக்-202110:12:06 IST Report Abuse
M  Ramachandran இஙகு கல்வித்தரம் பற்றி கவலை படாத கடந்த அறுபது ஆண்டுகளில் எதிர்த்து கேட்டப்போராற்று தமிழக மாணவர்கள் நலன் பாதித்திருக்கிறது. மக்களும் திருந்தின பாடில்லை. தேர் கும்பலுக்கு ஆட்சிப் பொறுப்பை கொடுத்து தலை நிமிரமுடியாமால் தரம் தாழ்ந்த மாணவர்களாக மற்ற வெகு கீழ் நிலையில் இருந்த மானிலன்களுடன் கூட போட்டி போடா முடியாமல் திணறுகின்றனர். இந்த இழிநிலைக்கு காரணமான கும்பல் ஏமாற்றி தலையில் மிளகாய் அரைத்து கொண்டு தான் இருக்கிறது. மக்களும் தலையை ஆட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் சி சி யை ஒளித்து கட்டினது ஹிந்தி எதிர்ப்புஎன்ற போரார்வயில் தமிழகத்தை தனிமை படுத்தி விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X