சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

உண்மையே உன் விலை என்ன?

Added : அக் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
உண்மையே உன் விலை என்ன?அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த -ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி


உண்மையே உன் விலை என்ன?அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த -ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை.'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் அரசியல்வாதிகள் மூன்று வேளையும் மூக்கு முட்ட, வயிறு கொள்ளாத அளவுக்கு சாப்பிடுகின்றனர்.அவர்கள் யாரும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக தெரியவில்லை. இவர்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர வைத்த வாக்காளர்கள் தான் சரியான, நிலையான வருமானம் இன்றி சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகின்றனர்.அரசியல் கட்சிகள் சொல்வது அனைத்தும் பொய் என, தேர்தல் ஆணையத்துக்கும் நன்றாகவே தெரியும். பின் எதற்காக இந்த போலியான செலவு கணக்கு சமர்ப்பிக்கும் சடங்கும், சம்பிரதாயமும்?உண்மையே உன் விலை தான் என்ன?


ரேஷனில் தரமான அரிசி கிடைக்க...அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் அட்டைகளின் வாயிலாக, 7.5 கோடி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு ரேஷனில் அரிசி பெரும்பாலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் தரம் மோசமாக உள்ளது. சுகாதாரமற்ற, துர்நாற்றம் வீசுகிற அரிசி வழங்கப்படுகிறது. ரேஷன் அரிசியை, மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.

இதனால், ரேஷன் அரிசி பிற மாநிலங்களுக்கு கடத்தல், கடைகளுக்கு விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்கள் நடக்கின்றன. ரேஷனில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூர் அரிசி ஆலையில், 50 ஆயிரம் டன் அளவிற்கு நெல் மற்றும் அரிசி தானியங்கள் சேமிக்கக் கூடிய அளவில் மிக பிரமாண்டமான கிடங்கு உள்ளது; ஆனால், அது முழுமையாக பயன்படுத்தப்படுவது இல்லை. இதே போல தமிழகத்தில் பல பிரமாண்ட கிடங்குகள் உள்ளன; அவற்றை முழுமையாக பயன்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்யப்பட்ட உடன், கிடங்குகளில் சேமிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நிலையங்களிலேயே மேற்கூரை இல்லாத தரைதளத்தில் மழையில் நனைந்து கிடக்கின்றன.

அதனால் பெருத்த சேதம் ஏற்படுகிறது. கொள்முதல் செய்த உடன், நெல் மூட்டைகளை கிடங்கில் சேமிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், பல நாட்கள் கழித்து ஆலைகளுக்கு அரைப்பதற்காக செல்கின்றன. அங்கும் போதிய வசதி இல்லாத காரணத்தால், தரமான அரிசி கிடைக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன், கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, நெல்லை வேக வைத்து, அரிசியாக மாற்றினர். இப்போதும் அதே நடைமுறை, நவீன அரிசி ஆலையில் நிலவுவது வேதனைக்குரியதாகும். அரசுக்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகளில் தேவையான பராமரிப்பு மற்றும் வசதியை ஏற்படுத்தினால், மக்களுக்கு நிச்சயமாக தரமான அரிசி கிடைக்கும்.
எல்லாருக்கும் ஓய்வூதியம் தேவை!க.சிவகாமிநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: எதையோ சொல்ல வந்தவர், அதற்கு நேருக்கு மாறாய் வேறு கருத்தை சொல்வதை தான், 'சந்தடி சாக்கில் கந்தகப் பொடி விற்றானாம்' என்பர்.'பென்ஷன் என்பது பிச்சை அல்ல' என்ற தலைப்பில், இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.அவர், 'பென்ஷன்' என்பது அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை என விளக்கியிருந்தார்.
அவர், 'மாநில அரசு துறையில் எந்த பணியில் இருந்தாலும், லஞ்சம் வாங்க வாய்ப்பு உண்டு' என்ற பழியை விபரமில்லாமல் சொல்லி, ஒரு விவாதப் பொருளை உருவாக்கி விட்டார்.நான் 37 ஆண்டுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, நாணயமான முறையில் ஓய்வு பெற்றவன்.என்னை போல பலரும், மாநில அரசு துறையில் பணியாற்றி, சம்பளம் தவிர்த்து, 1 ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்; ஓய்வு பெற்றும் வருகின்றனர்.இது, அரசு ஊழியர்களின் பெருமை அல்ல; கடமை!லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் ஒரு கொடுமையான நோய். இதற்கு, 'பேராசை' என்ற விஷ வித்து தான் காரணம்.லஞ்சம் வாங்குவோரையும், கொடுப்போரையும் இனம் கண்டு தண்டிக்க வேண்டும் என்பதில், இரண்டாவது கருத்தே இல்லை.நேர்மையான மாநில அரசு ஊழியர்கள் நம்மிடையே பலர் இருக்கின்றனர் என்பதையும், நாம் மறக்கக் கூடாது; மறுக்கவும் முடியாது.
தவறு செய்யும் சில ஊழியர்களை மனதில் நினைத்து, 'எல்லாருமே அப்படி தான்' என தவறாக எடை போடக் கூடாது.ஓய்வூதியம் என்பது ஊழியர்களின் உரிமை என உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, தீர்ப்பு வழங்கி உள்ளது.இன்றைய சூழ்நிலையில், பெற்றோரை பேணி பாதுகாக்கும் மனநிலையில் இளைஞர்கள் இல்லை.பணியில் இருந்து ஓய்வு பெற்றவரின் சேமிப்புக்கு, வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் நாளுக்கு நாள் மங்கி வருகிறது. இதில், தலை சுற்ற வைக்கும் விலைவாசி உயர்வு வேறு தாக்குதல் நடத்துகிறது; போதாக்குறைக்கு புது புது நோய்கள் படையெடுக்கின்றன.
நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக கட்டமைத்து, பெரும் பங்களிப்பை செய்து வரும் மத்திய - மாநில மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் எல்லா ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் என்பது இன்றியமையாத ஒன்று!
உழைத்து களைத்தோர் எல்லாருக்கும் ஓய்வூதியம் தேவை.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalasamy N - CHENNAI,இந்தியா
08-அக்-202120:11:10 IST Report Abuse
gopalasamy N ஊதியம் உயரும் பொது பென்ஷன் மற்றம் செய்ய பட வேண்டும் பென்ஷன் விதீயில் மருளால் செய்ய படாததால் பலர் வாங்கிய ஊதியத்தை விட பென்ஷன் கூடுதலாக வாங்குகின்றனர்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-அக்-202115:37:36 IST Report Abuse
D.Ambujavalli மாநில அரசில் எல்லாருக்கும் லஞ்சம் கொட்டாது அப்படி கொட்டும் துறை, ஊர் என்று ‘கொடுத்து’ வாங்குவதுதான் சிண்டிகேட் தர்மம் மாறாது அமைச்சர் வரை பங்கு வைக்க, எத்தனையோ தகிடுதத்தம் செய்ப்பவர்கள் நூற்றில் ஐந்தோ, பத்தோ சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். எந்த அரசுக்காகவும் முப்பது, முப்பத்தைந்து ஆண்டு உழைத்தவர், இறுதி நாட்களில் அத்யாவசிய தேவைகளுக்குக்கூடவும், சற்று கௌரவமாக வாழவும் தான் ஓய்வுஊதியம் வேண்டியிருக்கிறது இதை உணராமல், மாநில அரசு ஊழியர்களெல்லாம் லஞ்ச வில்லாக்கள் கட்டி வாழ்வதாக கூறுவது தவறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X