சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ம.தி.மு.க., வெற்றிக்கு உதவும் 'மாஜி' அமைச்சர்!

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ம.தி.மு.க., வெற்றிக்கு உதவும் 'மாஜி' அமைச்சர்!''பழைய படத்தை போட்டு நியாயம் கேட்டிருக்காரு பா...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார், அன்வர்பாய்.''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தன் முகநுால் பக்கத்துல ஒரு பதிவு போட்டிருக்கார்... அதுல, அ.தி.மு.க., ஆட்சியில சம்பள உயர்வு கேட்டு அரசு டாக்டர்கள் போராட்டம்

டீ கடை பெஞ்ச்


ம.தி.மு.க., வெற்றிக்கு உதவும் 'மாஜி' அமைச்சர்!



''பழைய படத்தை போட்டு நியாயம் கேட்டிருக்காரு பா...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தன் முகநுால் பக்கத்துல ஒரு பதிவு போட்டிருக்கார்... அதுல, அ.தி.மு.க., ஆட்சியில சம்பள உயர்வு கேட்டு அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்துனப்ப, ஸ்டாலின், பொன்முடி, சேகர்பாபு எல்லாம் அவங்களுக்கு ஆதரவு தெரிவிச்சு, அவங்களோட தரையில அமர்ந்திருந்த போட்டோவை வெளியிட்டிருக்காரு பா...

''அதோட, 'அடுத்து அமையும் நம் ஆட்சியில், டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும்னு ஸ்டாலின் உறுதி தந்தார்... சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்கிற முதல்வர், டாக்டர்களின் சம்பள உயர்வுக்கும் உத்தரவிடுவார்னு எதிர்பார்க்கிறோம்'னு பதிவிட்டிருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''பொண்ணு பார்த்து கல்யாணம் முடிச்சு வைப்போம்னு மட்டும் தான் வாக்குறுதி தரலைங்க...'' என அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அந்தோணிசாமி.

''உள்ளாட்சி தேர்தல் கலாட்டாவா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஆமாம்... வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்கள்ல நாளைக்கு ரெண்டாம் கட்ட தேர்தல் நடக்குதுங்க... சில வேட்பாளர்கள், 'எனக்கு ஓட்டு போடுறதா சாமி படத்துல சத்தியம் செஞ்சு தந்தா, தினமும் காலை, மாலை 1 லிட்டர் பால், 25 கிலோ அரிசி, தினமும் இரண்டு மூட்டை, 'கரன்ட் பில்' கட்டுறோம்'னு வாக்குறுதி தந்திருக்காங்க...

''இன்னும் சிலர், 'பெண்களுக்கு தங்கக்காசு, வெள்ளி கொலுசு, திருப்பதி, பெங்களூர் டூர், மூணு மாச மளிகை சாமான், வாரம் ரெண்டு முறை மட்டன், சிக்கன் பிரியாணி, ஆந்திரா கள், முக்கம்பா சாராயம், செலவுக்கு 1,000 ரூபாய் பணம் தர்றோம்'னு அள்ளி விட்டிருக்காங்க...

''ஓட்டு கேட்டு போனப்பவே, எல்லா கட்சி வேட்பாளர்களும், வாக்காளர்களுக்கு நிறைய பரிசு பொருட்களை குடுத்திருக்காங்க... பலரும் கடன் வாங்கியும், வீடு, நிலங்களை அடகு வச்சும் தான் இதை செய்றாங்க... போட்ட முதலை, பதவிக்கு வந்த சில மாசங்கள்லயே எடுத்துடலாம்கிறது தான் இந்த வானளாவிய வாக்குறுதிகளுக்கு காரணமுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''என்கிட்டயும் ஒரு தேர்தல் தகவல் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியத்துல தான், வைகோவின் சொந்த ஊர் இருக்கு... இந்த ஒன்றிய தலைவர் பதவியை எப்படியும் பிடிச்சாகணும்னு, வைகோவின் மகன் துரை, கங்கணம் கட்டி வேலை பார்த்துட்டு இருக்காரு வே...

''இதுக்காக, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஒருத்தரிடம், 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்தி, ம.தி.மு.க., வெற்றிக்கு உதவணும்னு கேட்டிருக்காவ...

''சட்டசபை தேர்தல்ல, கோவில்பட்டி தொகுதியை ம.தி.மு.க., கேட்காம, அ.தி.மு.க., முக்கிய புள்ளி ஜெயிக்க விட்டு கொடுத்துச்சாம்... அந்த நன்றிக் கடனுக்காக, குருவிகுளத்துல ம.தி.மு.க., ஜெயிக்க 'மாஜி'யும் உதவியா இருக்காருன்னு, உள்ளூர் அ.தி.மு.க.,வினர் புலம்புதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.

''ராஜு வாரும்... கடம்பூர் போயிருந்தீரே... போளி வாங்கிண்டு வந்தீரா ஓய்...'' என, நண்பரிடம் குப்பண்ணா வம்பளக்க, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-அக்-202115:26:50 IST Report Abuse
D.Ambujavalli இப்படி எதிர்க்கட்சியின் விட்டுக்கொடுத்தலால் வந்து, இன்று அவர்கள் ‘எதிர் சீர்’ கேட்கும் நிலையில்தான் அதிமுகவின் சட்டமன்றத் தேர்தல் நடந்திருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X