பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : அக் 07, 2021
Share
Advertisement
அக்., 8, 1974கர்நாடக மாநிலம் கோலாரில், 1911 ஜூலை 26ம் தேதி பிறந்தவர், பி.ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு. ஆசிரியராக வேலை பார்த்து வந்தவருக்கு, நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், சம்சார நாவ்கே என்ற கன்னட படத்தில் நடித்தார். இதையடுத்து அவர் தயாரித்து, இயக்கிய தங்கமலை ரகசியம் படம், 1957ல் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. ஸ்ரீகிருஷ்ணதேவராயலு என்ற கன்னடத்தின் முதல்

இதே நாளில் அன்று


அக்., 8, 1974



கர்நாடக மாநிலம் கோலாரில், 1911 ஜூலை 26ம் தேதி பிறந்தவர், பி.ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு. ஆசிரியராக வேலை பார்த்து வந்தவருக்கு, நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், சம்சார நாவ்கே என்ற கன்னட படத்தில் நடித்தார். இதையடுத்து அவர் தயாரித்து, இயக்கிய தங்கமலை ரகசியம் படம், 1957ல் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. ஸ்ரீகிருஷ்ணதேவராயலு என்ற கன்னடத்தின் முதல் வண்ணப்படத்தையும் தயாரித்து, இயக்கினார். 'பத்மினி பிக்சர்ஸ்' என்ற பெயரில் பல படங்கள் தயாரித்தார். சின்னாட கோம்பே என்ற கன்னட படத்தின் மூலம், ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தனார்.வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் உட்பட, தென்மாநில மொழிகளில், 57 படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். கடந்த 1974 அக்., 8ம் தேதி தன் 63வது வயதில் இயற்கை எய்தினார்.இயக்குனர் பி.ஆர்.பந்துலு காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X