பொது செய்தி

இந்தியா

விரைவில் 100 கோடி 'டோஸ்' தடுப்பூசி : பிரதமர் மோடி திட்டவட்டம்

Updated : அக் 09, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (6+ 37)
Share
Advertisement
புதுடில்லி :''நாடு முழுதும் இதுவரை 93 கோடி 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைப்போம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 1,750 டன் ஆக்சிஜன்கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சத்தில் இருந்தபோது, ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பெரிதும்
100 கோடி டோஸ் , தடுப்பூசி , பிரதமர் , மோடி  திட்டவட்டம்

புதுடில்லி :''நாடு முழுதும் இதுவரை 93 கோடி 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைப்போம்,'' என, பிரதமர்
நரேந்திர மோடி கூறினார். உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


1,750 டன் ஆக்சிஜன்கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சத்தில் இருந்தபோது, ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.கொரோனா தொற்றை எதிர்கொள்ள பிரதமர் மோடி, 'பி.எம்.கேர்ஸ்' என்ற பெயரில் நிதியத்தை கடந்த ஆண்டு மார்ச்சில் துவக்கினார். இதற்கு தொழிலதிபர்கள் உட்பட பலரும் தாராளமாக நிதி வழங்கினர்.இந்நிலையில், பி.எஸ்.கேர்ஸ் வாயிலாக பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உத்தரகண்ட் முதல்வர் தாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:நாடு முழுதும் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 1,100க்கும் அதிகமான நிலையங்கள் உற்பத்தியை துவங்கி விட்டன. இதன் வாயிலாக, நாள்தோறும் 1,750 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது, மேலும் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு எதிராக பல தடைகளை கடந்து வந்துள்ளோம். கொரோனா அச்சுறுத்தலை சிறப்பாக எதிர்கொண்டோம். ஆக்சிஜன் வினியோகத்திற்காக சிறப்பு ரயில்களை துவக்கினோம். விமானப் படையும் ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவியது.


அரசின் லட்சியம்இதற்கெல்லாம் பி.எம்.கேர்ஸ் நிதி பெரும் உதவியாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், கொரோனா பரவல் தடுப்பில் பெரும் பங்காற்றி உள்ளன. இதுவரை 93 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. விரைவில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைப்போம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா வழிநடத்தி வருகிறது.நாட்டில் ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை இருந்தது. இப்போது அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை, கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், ஒரு மருத்துவ கல்லுாரியாவது அமைக்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் லட்சியம். கொரோனா பரவல் துவங்கிய போது, ஒரே ஒரு பரிசோதனை கூடம் தான் இருந்தது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3,000த்துக்கும் அதிகமான கூடங்கள் உள்ளன.
கொரோனா தடுப்பு சாதனங்கள் தயாரிப்பிலும் நம் நாட்டில் சாதனை படைக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


பொது சேவையில் 20 ஆண்டுபிரதமர் மோடிக்கு வாழ்த்து குஜராத் முதல்வராக 2001 அக்., 7ல் நரேந்திர மோடி பதவியேற்றார். தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு மேல் குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014ல் பிரதமராக பதவியேற்றார். தன் பொதுச்சேவையில் நேற்றுடன் 20 ஆண்டுகளை பிரதமர் நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, பிரதமர் மோடிக்கு பா.ஜ., தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ''நாட்டில் சிறந்த நிர்வாகமும், வளர்ச்சிக்கான பயணமும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் துவங்கியது.

நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் 20 ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் மோடி உழைத்து வருகிறார்,'' என்றார்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறுகையில், ''நம்பிக்கையின்மை, ஏமாற்றத்திலிருந்து நாட்டையும், மக்களையும் பிரதமர் மீட்டுள்ளார். உலகின் குருவாக இந்தியா திகழ வேண்டும் என்பதற்காக 20 ஆண்டுகளாக ஓயாமல் உழைத்து வருகிறார். சிறந்த கர்ம யோகியாக செயல்பட்டு, புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்,'' என்றார்.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் சேவையில் இடைவிடாமல் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். மக்களிடம் அவரது செல்வாக்கு தினமும் அதிகரித்து வருகிறது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6+ 37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
08-அக்-202112:35:32 IST Report Abuse
Sandru மோடி திட்ட வட்டமாக சொல்லுவது கண்டிப்பாக நடக்கிறது. பெட்ரோல் விலை ரூபாய் நூறு தாண்டி விட்டது. ரூபாயின் மதிப்பு யு எஸ் டாலருக்கு நூறை தொடப்போகிறது. காஸ் விலை ரூபாய் ரூபாய் ஆயிரம் தாண்ட இருக்கிறது .
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-அக்-202111:57:25 IST Report Abuse
sahayadhas அடுத்து Gas எவ்வளவு உயரும் .
Rate this:
Cancel
jeyakumar - MADURAI,இந்தியா
08-அக்-202110:06:07 IST Report Abuse
jeyakumar மோடி ஜி அவர்களின் தேசபக்தியும் கடுமையான உழைப்பும் இந்தியாவை கொரோன தொற்றிலிருந்து மீட்டிருக்கிறது. தடுப்பூசிக்காக எந்த வெளிநாட்டிலும் கையேந்தாமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வைத்து கிட்டத்தட்ட நூறு கோடி மக்களுக்கு குறைந்தது ஒரு டோஸாவது செலுத்தி சாதனை செய்திருக்கிறார். அவரை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை முற்றிலும் தவிர்த்து கடமையே கண்ணாக இருபது வருடங்களாக லீவு எடுக்காமல் நமது பாரத தேசத்திற்க்காக உழைத்து வரும் மோடி ஜி அவர்கள் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் எந்த தலைவனும் செய்ய முடியாத சாதனையை காரோண காலத்தில் செய்த நமது பிரதமரை குறை கூறுவது ஒன்றே நமது எதிர்க்கட்சிகளின் முக்கியமான கொள்கையாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X