சில வரி செய்திகள்...: இந்தியா

Added : அக் 07, 2021
Share
Advertisement
மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்மஹாசமுந்த்: சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் திலிப் சானு என்ற அரசுப் பள்ளி ஆசிரியர், குடும்ப உறுப்பினரின் காரிய சடங்குகளை நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கு தன் பள்ளி மாணவர்களையும் அழைத்திருந்தார். அதில் பங்கேற்று உணவு சாப்பிட்ட குழந்தைகள் உட்பட, 100க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள்

மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

மஹாசமுந்த்: சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் திலிப் சானு என்ற அரசுப் பள்ளி ஆசிரியர், குடும்ப உறுப்பினரின் காரிய சடங்குகளை நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கு தன் பள்ளி மாணவர்களையும் அழைத்திருந்தார். அதில் பங்கேற்று உணவு சாப்பிட்ட குழந்தைகள் உட்பட, 100க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை

கோட்டா: ராஜஸ்தானில் 2019ல், 10ம் வகுப்பு மாணவியை பரியாத் அலி என்ற, 56, வயதான ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி போலீசாரிடம் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 47 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

டில்லியில் 2 தாதாக்கள் கைது

புதுடில்லி: டில்லியில் உள்ள ரோஹினி நீதிமன்றத்திற்குள் சமீபத்தில் பிரபல தாதாவான ஜிதேந்திர ஜோகியை வழக்கறிஞர்கள் வேடத்தில் இருந்த இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்த சம்பவத்தில் தொடர்புடைய தாதாக்களான தில்லு தஜ்பூரியா மற்றும் நவீன் பல்லி ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

ஐ.ஐ.டி., மாணவர் சில்மிஷம்

புதுடில்லி: கராக்பூர் ஐ.ஐ.டி.,யில் மஹாவீர் என்ற, 19 வயதான இளைஞர், பி.டெக்., படித்து வருகிறார். இவர், டில்லியில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவியர் மற்றும் பெண் ஆசிரியர்களை பின் தொடர்ந்து சென்று, அவர்களை படம் பிடித்துள்ளார். அதை, 'மார்பிங்' செய்து சமூக வலை தளங்களிலும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்டோரின் படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், மஹாவீரை போலீசார் கைது செய்தனர்.

பட்டய கணக்காளர் கைது

ஆமதாபாத்: குஜராத்தின் வதோதரா நகரில், 69 வயதான பட்டய கணக்காளர் ஒருவரிடம், 24 வயதான இளம்பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த உதவியாளரை, பட்டய கணக்காளர், தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

மசூதியில் படுகொலை

சித்தார்த் நகர்: உத்தர பிரதேசத்தின் சித்தார்த் நகரில் உள்ள ஒரு மசூதியில், நேற்று அதிகாலை வழக்கம்போல் தொழுகை நடந்தது. அப்போது அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த, 55 வயதான நபரை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X