உ.பி., வன்முறை: உச்சநீதிமன்றத்தில் காரசாரம்

Updated : அக் 09, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:'உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் எட்டு பேர் உயிரிழக்க காரணமான வன்முறை சம்பவம் தொடர்பாக, யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த விசாரணை நிலை அறிக்கையை உ.பி., அரசு இன்று தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது, அரசின் நடவடிக்கை திருப்தி இல்லை என
லக்கிம்பூர் ,கைது, உ.பி., அரசு, உச்ச நீதிமன்றம்

புதுடில்லி:'உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் எட்டு பேர் உயிரிழக்க காரணமான வன்முறை சம்பவம் தொடர்பாக, யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த விசாரணை நிலை அறிக்கையை உ.பி., அரசு இன்று தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது, அரசின் நடவடிக்கை திருப்தி இல்லை என தெரிவித்தனர்.


குற்றச்சாட்டு

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கிறது.இந்நிலையில் லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த பா.ஜ., கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கூட்டத்துக்குள் புகுந்தது. மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அந்தக் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப் பட்டனர். அதில் தனியார், 'டிவி' நிருபர், பா.ஜ.,வைச் சேர்ந்த மூவர் அடங்குவர்.இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற பா.ஜ., அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வன்முறை சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:லக்கிம்பூர் வன்முறையில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது.


அதிர்ச்சி

இந்த விவகாரத்தில் யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனரா என்ற விபரங்கள் அடங்கிய நிலை அறிக்கையை, உ.பி., அரசு இன்று தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த லவ்ப்ரீத் சிங் என்பவரது தாயார், தன் மகன் இறந்த அதிர்ச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, அம்ரிதி பால் சிங் கல்சா என்பவர் எங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் உ.பி., அரசு உடனடியாக செய்து தர வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஒரு நபர் கமிஷன் அமைப்பு!லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன் இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கும் விசாரணையின் போது இந்த ஒரு நபர் கமிஷன் தொடர்பாகவும் விபரங்களை தாக்கல் செய்யும்படி, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.'


ஓய்வு பெற்ற நீதிபதி வேண்டாம்!

'காங்., பொதுச் செயலர் பிரியங்கா கூறியதாவது:வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் கூடாது. பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமானால், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் மகனுக்கு 'சம்மன்'லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவரை உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமபடி போலீஸ் தரப்பில் இருந்து நேற்று, 'சம்மன்' அனுப்பப்பட்டது. மேலும் இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ''ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராக தவறினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஐ.ஜி., லட்சுமி சிங் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது:8 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பதற்றமான நேரத்தில் உ.பி., அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். கலவரம் குறித்த விசாரணையில் உ.பி., அரசின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை. விசாரணையை மற்றொரு அமைப்பு ஏற்கும் வரை ஆதாரங்களை போலீசார் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
08-அக்-202113:05:12 IST Report Abuse
yavarum kelir காசிமணி அவர்களே, அபிநந்தன் பாகிஸ்தானிலிருந்து பாரதம் வரவழிக்கப்பட்டார்க்கு முழு காரணம் மோடி. ஆனால் அதை தேர்தலில் மோடி பயன்படுத்திக்கொள்ள வில்லை. ஆனால் இந்த சுயநல காங்கிரஸ் மற்றும் யாதவ் பரம்பரை பிண அரசியலை தேர்தலுக்காக மிக மிக நேர்தியாக பயன்படுத்திக்கொள்ளும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-அக்-202112:40:04 IST Report Abuse
duruvasar இங்ககூட ராமஜெயம் கொலை வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எசமான். ஒழித்தான் துரோகி என்கிற மாதிரிதான் இந்த கேஸ் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-அக்-202108:35:20 IST Report Abuse
VENKATASUBRAMANIAN காங்கிரஸ் சமாஜவாடி போன்ற கட்சிகள் இதை அரசியல் ஆக்கி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X