பஸ் - லாரி மோதல் உ.பி.,யில் 15 பேர் பலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
பாரபங்கி:உத்தர பிரதேசத்தில் பஸ் - லாரி நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் இறந்தனர்.டில்லியிலிருந்து உ.பி., மாநிலம் பஹரைச் நோக்கி, 70 பயணியருடன் ஒரு பஸ் சென்றது. பாரபங்கி மாவட்டம் பபூரி கிராமத்துக்கு அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற பசு மாட்டின் மீது மோதாமல் இருக்க, டிரைவர் முயற்சித்தார். அப்போது எதிரே வந்த மணல் லாரி, பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணித்தவர்களில்
 பஸ் - லாரி மோதல் உ.பி.,யில் 15 பேர் பலி

பாரபங்கி:உத்தர பிரதேசத்தில் பஸ் - லாரி நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் இறந்தனர்.

டில்லியிலிருந்து உ.பி., மாநிலம் பஹரைச் நோக்கி, 70 பயணியருடன் ஒரு பஸ் சென்றது. பாரபங்கி மாவட்டம் பபூரி கிராமத்துக்கு அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற பசு மாட்டின் மீது மோதாமல் இருக்க, டிரைவர் முயற்சித்தார். அப்போது எதிரே வந்த மணல் லாரி, பஸ் மீது மோதியது.

இதில் பஸ்சில் பயணித்தவர்களில் ஒன்பது பேர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் 27 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு ஆறு பேர் இறந்தனர். மேலும் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ''விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்,'' என, முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X