அஜித் பவார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை| Dinamalar

அஜித் பவார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

Added : அக் 07, 2021
Share
மும்பை:மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்க்கரை ஆலைகடந்த 2010ல் சதாரா மாவட்டத்தில் உள்ள ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையை, மாநில கூட்டுறவு வங்கி
 அஜித் பவார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

மும்பை:மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


சர்க்கரை ஆலை

கடந்த 2010ல் சதாரா மாவட்டத்தில் உள்ள ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையை, மாநில கூட்டுறவு வங்கி குறைந்த விலையில் ஏலத்தில் விட்டது.அந்த நேரத்தில் கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் வாரியத்தில் பிரதான உறுப்பினராக தற்போதைய துணை முதல்வரான அஜித் பவார் இருந்தார்.அந்த ஆலையை வாங்க உபயோகிக்கப்பட்ட நிதிகளில் பெரும்பாலான தொகை அஜித் பவாருக்கு சொந்தமான, 'ஸ்பார்க்லிங் சாயில் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. இந்த ஆலையை வைத்து வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் 65.75 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சர்க்கரை ஆலையை முடக்கினர். இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் அஜித் பவாரின் சகோதரிகள் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.


சோதனை

இதனுடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சிலவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனைகளில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


எந்த பிரச்னையும் இல்லை!

எனக்கு தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி உள்ளதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அனைத்து நிறுவனங்களும் முறையாக வரி செலுத்தி வருகின்றன. என் சகோதரிகளை இந்த விவகாரத்தில் இழுப்பது கவலை அளிக்கிறது.

அஜித் பவார்

மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X