அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த குளறுபடிகள் : விவாதிக்க தயாரென சுப்பிரமணியன் சவால்

Added : அக் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:''அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவ துறையில் நடந்த குளறுபடிகளை சரி செய்து வருகிறோம். இதுகுறித்து, நேரடியாக விவாதிக்கவும் தயார்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள இரண்டு, 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக நாட்டுக்கு
 அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த குளறுபடிகள் : விவாதிக்க தயாரென சுப்பிரமணியன் சவால்

சென்னை:''அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவ துறையில் நடந்த குளறுபடிகளை சரி செய்து வருகிறோம். இதுகுறித்து, நேரடியாக விவாதிக்கவும் தயார்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள இரண்டு, 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அளித்த பேட்டி:

தமிழகத்தில், பிரதமர் கேர் நிதியின் வாயிலாக 70 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் புதிதாக துவக்கப்படும், 11 மருத்துவக் கல்லுாரிகளிலும், தலா, 150 மருத்துவ இடங்களை பெற, மருத்துவ கல்வி இயக்குனர் டில்லியில் முகாமிட்டுள்ளார்.கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில், எக்ஸ்ரே பரிசோதனை முடிவு பேப்பரில் வழங்கப்பட்டது என்பது தவறான தகவல்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில், பிலிம் ரோல்களில் எக்ஸ்ரே பரிசோதனை கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, டிஜிட்டல் முறையில், 'வாட்ஸ் ஆப்' போன்றவற்றில் தான் தரப்படுகிறது. விபத்து போன்ற நீதிமன்றம் செல்ல வேண்டிய நேரங்களில் மட்டுமே பிலிம் ரோல்களில் வழங்கப்படும்.

இது தெரியாமல், எதிர்க்கட்சி துணை தலைவர் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முந்தைய ஆட்சியை விட 487 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப் பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., ஆட்சி யில், மினி கிளினிக்கில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு சம்பளம் வழங்க 144 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், நர்ஸ்கள் நியமிக்க பட வில்லை. இல்லாத நர்ஸ்களுக்கு நிதி ஒதுக்கியது அ.தி.மு.க., அரசு தான்.

மத்திய அரசிடம் இருந்து 800 கோடி ரூபாய் கொரோனா நிதி பெறப்பட்டுள்ளது. இந்த நிதி மறுமதிப்பீடு செய்யப்பட்ட பின், 4,900 நர்ஸ்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு இந்த நிதியின் கீழ் சம்பளம் வழங்கப்படும்.மருத்துவ துறையில், அ.தி.மு.க., ஆட்சியில் செய்த குளறுபடிகளை சரி செய்து வருகிறோம்.

குறிப்பாக, முழு உடற்கவசம், டாக்டர்கள் தங்கும் விடுதி, உணவு உள்ளிட்டவற்றின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பலவற்றை, நேரடியாக விவாதிக்கவும் தயார்.சமூக வலை தளங்களில் வரும் தவறான தகவலை வைத்து குற்றம்சாட்டுவது நல்ல அரசியலுக்கு அழகல்ல என்று எதிர்க்கட்சி துணை தலைவருக்கு தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
09-அக்-202114:16:07 IST Report Abuse
raja பாலினியின் சவாலையே ஏற்கமுடியாது தலைமையை கொண்டவாறு சொல்லறாரு.... தலைவன் போல ஓடி ஒழிய மாட்டாருன்னு நம்பலாமா?
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-அக்-202114:26:36 IST Report Abuse
vpurushothaman எநதப் புற்றில் எது இருக்கிறது எனத் தெரியவில்லை. சில சமயங்களில் சாத்தானும் வேதம் ஓதும் போலிருக்கிறது.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
08-அக்-202102:49:36 IST Report Abuse
BASKAR TETCHANA . உன் துறை எதுவுமே சரியில்லை. அடுத்தவன் மேல் பழி போடுவது தான் உனக்கும் உன் தலைவனுக்கும் தெரிந்த தொழில். இன்று ஒரு பையன் கதறும் காட்சி வைரலாக பரவி கொண்டு இருக்கிறது. கோரோனோவால் தந்தையை இழந்த குடும்பம் இரண்டு தங்கைகள் அந்த பையனுக்கு. அவன் அம்மாவுக்கு திடீர் மாரடைப்பு வந்து மருத்துமனைக்கு கொண்டு போனார்கள். ஆனால் அங்கு மருத்துவர் இல்லை . சுற்றி உள்ளவர்கள் அந்த அம்மாவை காப்பாயிர எவ்வளவோ முயற்சி செத்தனர். மருத்துவர் ஒரு செவிலியரை தள்ளி கொண்டு பொய் கூத்தடிக்கிறான் . மருத்துவமனையில் எவ்வவளோ தவறுகள் நடக்கின்றன அதை எல்லாம் தட்டி கேட்க துப்பில்லாத உன்னக்கு எதற்கு மந்திரி பதவி. கடைசியில் அந்த அம்மா இறந்தே விட்டார்கள். . அந்த குடும்பம் இப்போது நாடுடத்தெருவில் நிற்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X